இதெல்லாம் தெரிந்துதான் சாப்பிடுகிறோமா??? Description: இதெல்லாம் தெரிந்துதான் சாப்பிடுகிறோமா???

இதெல்லாம் தெரிந்துதான் சாப்பிடுகிறோமா???


இதெல்லாம் தெரிந்துதான் சாப்பிடுகிறோமா???

படித்ததில் வலித்தது...!!!

என் அலுவலத்தின் பக்கத்திலேயே ஒரு சிப்ஸ் தயாரிக்கற கடை இருக்கு. அங்க 11 மணிக்கு பாமாயிலை பெரிய கடாய்ல ஊற்றி முதல்ல ஆனியன் பக்கோடா, பின்னர் அதே எண்ணையில் 3 மணிக்கு சமோசா, அதற்கு அடுத்ததாக உருளை சிப்ஸ்ன்னு போட்டு முடிக்கிறாங்க.. எண்ணைய் குறைய குறைய இருக்கிற எண்ணைய்லேயே இன்னும் கொஞ்சம் புது எண்ணையை சேத்துக்கறாங்க.

ஒரு முறை பொரிச்ச எண்ணையை மறுபடியும் சமையலுக்கு பயன்படுத்தினா உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்னு சொல்றாங்க. ஆனா இதெல்லாம் கடைக்காரங்க கடைபிடிக்கறது இல்லே. இதோட இந்த எண்ணெய்ய விட்டுட்டா பரவாயில்லே. அடுத்த நாள் இதை வாங்கிட்டுப்போறதுக்கு ரோடோரங்கள்ல ஃபாஸ்ட் ஃபுட் கடை வச்சிருக்கறவன் கேனோட வந்து நிக்கிறான். இந்த சிப்ஸ் கடைக்காரன் தான் வாங்கிய விலையில் இந்த யூஸ் பண்ண எண்ணையை பாதிவிலைக்கு அவன்கிட்ட தள்ளிவிடறான்.. அவன் அதை கொண்டுபோய் மறுபடியும் அதனோட கொஞ்சம் புது எண்ணையை சேர்த்து சிக்கன்லேந்து, மீன்லேந்து எல்லாத்தையும் பொரிக்க ஆரம்பிக்கறான்.

அவன் போடற பிரைடு ரைஸ், நூடுல்ஸ்ல இருந்து, பாஸ்ட் ஃபுட் மொத்தத்துக்கும் அந்த எண்ணைய்தான் பயன்படுத்தறான்.. மாசாலா தூக்கலாப்போட்டு எண்ணைய் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஊத்தி ஒரு எக் நூடுல்ஸ் போடுப்பான்னு ஆர்டர் பண்றவங்களுக்கு இதெல்லாமா தெரியப்போகுது? அப்படியே கெட்ட கொழுப்புதான் உடம்புல உட்காரும். இவனோட போகலே, வீட்ல இருக்கிற குழந்தைகளுக்கும் இதை பார்சல் வாங்கிட்டு போய் கொடுத்து அவங்க உடல்ஆரோக்கியத்தையும் கெடுக்கிறவங்களை நினைச்சு வருத்தப்படறதா இல்லே பரிதாபப்படறதான்னு தெரியல..

நம்ம நாட்ல உணவு விஷயத்தில் விழிப்புணர்வு என்பது மக்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது.. அரசாங்கமும் இவற்றை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை..


நண்பர்களுடன் பகிர :