மனநலம் பாதிப்படைந்தவரை சுத்தப்படுத்தி அழகுபார்த்த மனித நேயமிக்க காவலர் Description: மனநலம் பாதிப்படைந்தவரை சுத்தப்படுத்தி அழகுபார்த்த மனித நேயமிக்க காவலர்

மனநலம் பாதிப்படைந்தவரை சுத்தப்படுத்தி அழகுபார்த்த மனித நேயமிக்க காவலர்


மனநலம் பாதிப்படைந்தவரை சுத்தப்படுத்தி அழகுபார்த்த மனித நேயமிக்க காவலர்

இப்போதெல்லாம் மக்கள் பலருக்கும் காவலர்கள் மீது உள்ள நம்பிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் காவலர் பணியை சேவையாக செய்துவரும் காவலர்களும் அதிகம் உள்ளனர்.

அப்படிதான் கோவை செல்லவபுரம் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர்தான் பிரதீப். இவர் பேரூர் சாலையில் இருக்கும் தணிக்கை நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றார்.இவர் தற்போது செய்த ஒரு சேவை மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை அவருக்கு பெற்றுதந்துள்ளது.

இவர் தான் வேலை பார்க்கும் பகுதியில் பல நாட்களாக அழுக்காகவும், அதிக முடியுடன் இருந்த ஒரு மன நலம் பாதிக்கபட்ட பிச்சைக்காரரை , தன் வேலைக்கு இடைப்பட்ட நேரத்தில் அந்த நபரை சுத்தம் செய்து, தன் கையால் முடிவெட்டி, புது துணி உடுத்தி அழகுபடுத்தியுள்ளார். இது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த காவலரை அனைவரும் பாராட்டியும் வருகின்றனர். இது போன்ற காவல்துறை பணியாளர்களை ஊக்கப்படுத்த, நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம். மேலும் பிரதீப் அவர்கள் இந்த சேவையை மேலும், மேலும் சிறப்பாக செய்ய நாம் வாழ்த்துவோம்.


நண்பர்களுடன் பகிர :