குட்டிப் பொடியனின் ஆசை.. வேற லெவலில் நிறைவேற்றிய போலீஸ்காரர்...! Description: குட்டிப் பொடியனின் ஆசை.. வேற லெவலில் நிறைவேற்றிய போலீஸ்காரர்...!

குட்டிப் பொடியனின் ஆசை.. வேற லெவலில் நிறைவேற்றிய போலீஸ்காரர்...!


குட்டிப் பொடியனின் ஆசை.. வேற லெவலில் நிறைவேற்றிய போலீஸ்காரர்...!

‘’காவல்துறை உங்கள் நண்பன்” என தமிழகத்தில் காவல்துறை சார்பில் ஆங்காங்கே எழுதி இருப்பதை பார்த்திருப்போம். இதை வார்த்தையாக காவல் துறை சொல்லிக் கொண்டிருக்க, நிஜத்திலேயே சில காவலர்களின் செயல்பாடுகளும் அதை மெய்ப்பிக்கும்வகையில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படியான சம்பவங்களில் இதுவும் ஒன்று!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நகர காவல் ஆய்வாளராக இருப்பவர் ராஜா. இவர் வழக்கம் போல் வாணியம்பாடி, நகர சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பள்ளிவாசலில் ரமலான் சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு முஜஹீர் என்பவர் தன் மகன் மூபஷீருடன் வந்து கொண்டிருந்தார். அந்த பையன் மிகவும் பொடியன். அதேநேரத்தில் துரு, துருவென பேசுபவன். அவன் போலீஸைப் பார்த்ததும், அங்கிள் உங்க தொப்பியை வைச்சுட்டு. உங்க கூட பைக்கில் ஒரு ரைடு வர வேண்டும் எனக் கேட்டார்.

உடனே, அதற்கு உதவி ஆய்வாளர் ராஜா சரி எனச் சொன்னார். கூடவே அந்த பொடியனை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு ஒரு ரைடும் வந்தார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். இந்த காலத்தில் இவ்வளவு நல்ல போலீஸா? என இந்தக் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :