கண்டித்த அசிரியை... டேபிளைத் தூக்கி தாக்க முயலும் மாணவர்.. வைரலாகும் காட்சி.. என்னதான் நடக்கிறது பள்ளிக்கூடங்களில்...? Description: கண்டித்த அசிரியை... டேபிளைத் தூக்கி தாக்க முயலும் மாணவர்.. வைரலாகும் காட்சி.. என்னதான் நடக்கிறது பள்ளிக்கூடங்களில்...?

கண்டித்த அசிரியை... டேபிளைத் தூக்கி தாக்க முயலும் மாணவர்.. வைரலாகும் காட்சி.. என்னதான் நடக்கிறது பள்ளிக்கூடங்களில்...?


கண்டித்த அசிரியை... டேபிளைத் தூக்கி தாக்க முயலும் மாணவர்.. வைரலாகும் காட்சி.. என்னதான் நடக்கிறது பள்ளிக்கூடங்களில்...?

முன்பெல்லாம் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பயந்து இருப்பார்கள். இப்போது காலம் தலைகீழாக மாறியிருக்கிறது. மாணவர்களுக்கு பயந்து ஆசிரியர்கள் இருக்கும் சூழல் உருவாகிவிட்டது. இதோ அண்மைக்காலமாக ஆசிரியர்களையே தாக்கப் பாயும் மாணவர்கள் பற்றிய செய்தி பரபரப்பூட்டுகிறது.

வாரத்திற்கு ஒரு வீடியோவேனும் அப்படி வெளியாகி கலங்க வைக்கிறது. அந்தவகையில் இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. குமரியாடி பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. கடந்த 28 ஆம் தேதி இங்கு பயிலும் மாணவர்கள் பள்ளிக்கூடத்திலேயே குத்தாட்டம் போட்டதுடன் ஆசிரியையை தாக்கவும் செல்கின்றனர். அதே வீடியோவில் ஒரு மாணவனை டீச்சரும் எச்சரிக்கிறார்.

பொதுவாக ஆசிரியை கண்டிக்காத மாணவன், எதிர்காலத்தில் சமூகத்தாலும், காவல்துறையாலும் கண்டிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்படும். கொரோனா காலத்தில் பள்ளிக்கூடங்கள் தொடர்ச்சியாக இல்லாதாதே இப்படியான சம்பவங்கள் நடக்கக் காரணம் என அமைச்சரே தெரிவித்திருந்தார். குமரிமாவட்ட சம்பவம் குறித்து, குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரிகளும்,போலீஸாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :