ஏழை மாணவிக்கு சிவ கார்த்திகேயன் செய்த செயல்.... நெகிழவைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்.. Description: ஏழை மாணவிக்கு சிவ கார்த்திகேயன் செய்த செயல்.... நெகிழவைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..

ஏழை மாணவிக்கு சிவ கார்த்திகேயன் செய்த செயல்.... நெகிழவைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..


ஏழை மாணவிக்கு சிவ கார்த்திகேயன் செய்த செயல்....  நெகிழவைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..

இளவயது, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சகலதரப்பிலும் மிகப்பெரிய ரசிகர் படையை வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் வாழ்வைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் இந்த முன்னேற்றத்துக்கு அவரது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே காரணம். சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தைத் தொடர்ந்து தற்போது டாக்டர் என்ற படத்தில் நடித்தார். அந்தப்படம் மெகா ஹிட்டானது. இப்போது அயலான், டான் என்னும் படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது ஒரு ஏழைப் பெண்ணுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி நெகிழ வைத்துள்ளது.

தேவசங்கரி என்னும் பெண் பிளஸ் டூ படித்துவிட்டு ஒரு பஞ்சர் ஒட்டும் கடையில் வேலை செய்து வந்தார். அவருக்கு எப்படியாவது நர்சிங் படிக்க வேண்டும் என ஆசை. ஆனால் குடும்பத்தின் வறுமையான சூழல் காரணமாக அவரால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. இது குறித்து சோசியல் மீடியாக்களில் தகவல் பரவியது. இதுபற்றித் தெரிய வந்ததும் நடிகர் சிவ கார்த்திகேயன், அந்த ஏழைப் பெண்ணை தொடர்பு கொண்டு விபரம் கேட்டார்.

உடனே அந்தப் பெண் தான் நர்சிங் படிக்க விரும்புவதாகச் சொன்னார். உடனே நடிகர் சிவகார்த்திகேயன் தன் சொந்த செலவில் அந்தப் பெண்ணை நர்சிங் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் நாகப்பட்டிணத்தில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் சிவ கார்த்திகேயன் அந்தக் குழந்தைக்கு அட்மிஷன் வாங்கிக் கொடுத்துள்ளார். கூடவே அந்த மாணவியின் குடும்பத்தினருக்கு பொங்கலுக்கு புதுத்துணி வாங்கிக் கொடுத்துள்ளார்.

இப்போது நெகிழ்ச்சியுடன் அதுபற்றி சொல்லியிருக்கும் அந்த மாணவி, ‘நானும் படிப்பு முடித்து நல்ல வேலைக்குப் போனதும், இதேபோல் பல ஏழைகளை படிக்க வைப்பேன். நடிகர் சிவ கார்த்திகேயன் சார் செய்த உதவிக்கு நன்றி’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :