என்ன பெத்த சாமி... ஏண்டா இப்படி பண்ணுற? அம்மாவை நெகிழச்செய்த மகன்... அப்படி என்ன செய்தார் தெரியுமா? Description: என்ன பெத்த சாமி... ஏண்டா இப்படி பண்ணுற? அம்மாவை நெகிழச்செய்த மகன்... அப்படி என்ன செய்தார் தெரியுமா?

என்ன பெத்த சாமி... ஏண்டா இப்படி பண்ணுற? அம்மாவை நெகிழச்செய்த மகன்... அப்படி என்ன செய்தார் தெரியுமா?


என்ன பெத்த சாமி... ஏண்டா இப்படி பண்ணுற? அம்மாவை நெகிழச்செய்த மகன்... அப்படி என்ன செய்தார் தெரியுமா?

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களே இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்.

எப்போதுமே தாய் பாசத்துக்கு பணம் பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு தாய் பாசம் உயர்ந்தது. அந்தவகையில் இங்கேயும் ஒரு இளைஞரின் தாய்ப் பாசம் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது. அது என்ன எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்

வாலிபர் ஒருவருக்கு முதன் முறையாக வேலை கிடைத்தது. அவர் அந்த வேலை செய்து கிடைத்த முதல்மாத சம்பளத்தில் தன் அம்மவுக்கு இரு கிப்ட்களை வாங்கி வந்தார். அதில் முதலில் ஒரு சேலை இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்த அம்மா, 666 ரூபாயா என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனார். உடனே மகன் இன்னொரு பாக்ஸையும் கொடுத்தார். அதில் செல்போன் ஒன்று இருந்தது. இதைப் பார்த்த அம்மா தன்னையும் அறியாமல் தளு, தளுத்தக் குரலில் மகனின் அருகில்வந்து என்ன பெத்த சாமி...ஏண்டா இப்படி பண்ணுற? என உருகிப் போகிறார். அந்தப் போன் வெறுமனே 8800 ரூபாய் தான். ஆனால் என் அம்மாவின் சந்தோஷம் பெரிது என அந்த இளைஞர் இதுகுறித்து பதிவிட அது வைரல் ஆகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :