நைய்யாண்டி மேளமா? செண்டை மேளமா எது பெருசு? அடித்துக்காட்டி சிலிர்க்கவைத்த கலைஞர்கள்... Description: நைய்யாண்டி மேளமா? செண்டை மேளமா எது பெருசு? அடித்துக்காட்டி சிலிர்க்கவைத்த கலைஞர்கள்...

நைய்யாண்டி மேளமா? செண்டை மேளமா எது பெருசு? அடித்துக்காட்டி சிலிர்க்கவைத்த கலைஞர்கள்...


நைய்யாண்டி மேளமா? செண்டை மேளமா எது பெருசு?  அடித்துக்காட்டி சிலிர்க்கவைத்த கலைஞர்கள்...

இசைக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவுமே இல்லை. நல்ல இசைக்கு மொழியே தேவை இல்லை. அது நம் மனதை வெகுவாக ஈர்த்துவிடும். அதனால் தான் மொழி கடந்து இசைக்கு எல்லா இடத்திலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதிலும் நம் தமிழகத்தின் பாரம்பர்யக் கலையான நைய்யாண்டி மேளத்துக்கு ரசிகர்கள் ஏராளம். கோயில் விசேசங்களின் போது நைய்யாண்டி மேளமே பிரதான இடம் பிடிக்கிறது. சமீபகாலமாக கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட செண்டை மேளமும் மிகவும் பிரசித்தி பெற்றுவருகிறது. செண்டை மேளக் கலைஞர்கள் பலரும் சேர்ந்து அதை இசைக்கும் போது நம்மையும் அறியாமல் அதில் சொக்கிப் போய்விடுவோம்.

அந்தவகையும் இங்கேயும் ஒரு கோயிலில் திருவிழா நடக்கிறது. இதில் செண்டை மேளமும், நைய்யாண்டி மேளமும் வைத்திருந்தனர். இவர்கள் இருவரும் தங்களுக்குள் போட்டி, போட்டுக்கொண்டு தங்களது இசைக்கருவிகளை இசைக்கத் தொடங்கினார்கள். இதைப் பார்த்த பார்வையாளர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. வடிவேலு ஒரு படத்தில் தப்பு பெரிதா? தாளம் பெரிதா? எனக் கேட்பது போல் இந்தக் காட்சி மிகவும் ரசனையாக உள்ளது. இதோ நீங்களே பாருங்கள்...


நண்பர்களுடன் பகிர :