வடிவேலுவுடன் காமெடிகளில் வரும் இவரை நினைவில் இருக்கிறதா? ஹிட் படம் கொடுத்த இயக்குனரின் இப்போதைய பரிதாப நிலை தெரியுமா..? Description: வடிவேலுவுடன் காமெடிகளில் வரும் இவரை நினைவில் இருக்கிறதா? ஹிட் படம் கொடுத்த இயக்குனரின் இப்போதைய பரிதாப நிலை தெரியுமா..?

வடிவேலுவுடன் காமெடிகளில் வரும் இவரை நினைவில் இருக்கிறதா? ஹிட் படம் கொடுத்த இயக்குனரின் இப்போதைய பரிதாப நிலை தெரியுமா..?


வடிவேலுவுடன் காமெடிகளில் வரும் இவரை நினைவில் இருக்கிறதா?  ஹிட் படம் கொடுத்த இயக்குனரின் இப்போதைய பரிதாப நிலை தெரியுமா..?

தமிழ்த்திரையுலகில் வடிவேல், விவேக் என பெரிய காமெடியன்கள் ஒருபக்கம் என்றால் சின்ன, சின்ன கேரக்டர்களில் நடிக்கும் காமெடியன்கள் டஜன் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நமக்குத் தெரிவதில்லை. அந்தவகையில் இந்த பகுதியில் தங்கபதக்கம் வடிவேலு காமெடியில் நடித்தவரைப் பற்றிப் பார்க்கலாம்.

அவரது பெயர் மறுமலர்ச்சி பாரதி. அவர் வெறுமனே காமெடி கேரக்டர் செய்யும் நடிகர் மட்டுமல்ல. இயக்குனரும் கூட. நடிகர் மம்முட்டி தமிழிலில் ஹீரோவாக நடித்த மறுமலர்ச்சி படத்தை இயக்கியதே இவர்தான். அந்த படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாது நடிக்கவும் செய்தார். இதுமட்டும் இல்லாமல் விஜயகாந்தை வைத்து கள்ளழகர், சரத்குமாரை வைத்து மானஸ்தன் படத்தையும் இயக்கியிருந்தார். கடைசியாக இவர் வள்ளுவன் வாசுகி என்னும் படத்தை எடுத்திருந்தார்.

தொடர்ந்து இயக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இயக்குனர் மறுமலர்ச்சி பாரதிக்கு ஒருகட்டத்தில் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்றுவந்த இவருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிட்சை செய்ய வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இவரிடம் பணம் இல்லாமல் சிகிட்சை செய்ய முடியவில்லை.

பொதுவாக யாரிடமும் உதவி கேட்பதையே விரும்பாத பாரதி சிகிட்சைக்கு யாரிடமும் உதவி கேட்கவும் இல்லை. இந்த விசயம் கேள்விப்பட்டு இயக்குனர் ஷங்கரும், திரைப்பட இயக்குனர்கள் சங்கமும் உதவி செய்துள்ளனர். ஹிட் படங்களைக் கொடுத்தவர் கடைசியில் வறுமை காரணமாக துண்டு, துக்கடா காமெடி காட்சிகளிலும் நடித்திருந்தார். இவர் நடித்த ‘டேய் பச்சைக்கிளி எங்க போற’ என்னும் காமெடி பெரிய அளவில் ஹிட் ஆனதாகும்.


நண்பர்களுடன் பகிர :