நடுரோட்டில் மனைவியோடு சண்டை போட்ட கணவர்..கடைசி நொடியில் நடந்த திருப்பம்! இதுதான் கர்மவினை என்பதா? Description: நடுரோட்டில் மனைவியோடு சண்டை போட்ட கணவர்..கடைசி நொடியில் நடந்த திருப்பம்! இதுதான் கர்மவினை என்பதா?

நடுரோட்டில் மனைவியோடு சண்டை போட்ட கணவர்..கடைசி நொடியில் நடந்த திருப்பம்! இதுதான் கர்மவினை என்பதா?


நடுரோட்டில் மனைவியோடு சண்டை போட்ட கணவர்..கடைசி நொடியில் நடந்த திருப்பம்!   இதுதான் கர்மவினை என்பதா?

கணவன், மனைவி இடையே எப்போது சண்டைவரும் என்பது யாராலும் கணிக்க முடியாத விசயம். திடீர், திடீர் என சண்டை வந்துவிடும். கணவன், மனைவி சண்டைக்கு இடம், பொருள் என எதுவும் தேவை இல்லை. தங்கள் வாழ்நாளில் சண்டையிட்டுக் கொள்ளாத கணவன், மனைவி என யாருமே இருக்க மாட்டார்கள்

அந்தவகையில் இங்கேயும் அப்படித்தான் சாலை ஓரத்தில் நின்றுகொண்டு ஒரு கணவனும், மனைவியும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். மனைவியும் டென்ஷன் ஆகி அவரைத் திட்டிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு வயதான பெண்மணி வந்தார். அவர் கையில் வைத்திருந்த பை தவறி விழுந்து அவர் வாங்கி வந்த பழங்கள் அனைத்தும் சாலையில் சிதறியது. வயதான அந்தப் பெண்மணியால் சாலையில் கீழே குனிந்து பொருட்களை எடுக்க முடியவில்லை. இதை பார்த்த சண்டை போட்டுக்கொண்டிருந்த பெண், தன் கணவரோடு சண்டையை நிறுத்திவிட்டு சிதறிக்கிடந்த பழங்களை எடுக்கப் போனார்.

இதைப் பார்த்த அவரது கணவர் அவரை விட மறுத்து சண்டை போட்டுக்கொண்டே இருந்தார். மேலும் சண்டை போடும் நோக்கத்தோடு சிதறிக்கிடந்த பழங்களை எடுத்துக்கொண்டிருந்த தன் மனைவியின் பக்கத்தில் போனார். அந்த நொடியில் மேலே இருந்து ஒரு கடையின் போர்டு தரையில் விழுந்தது. பழத்தை எடுக்கச் செல்லாமல் தம்பதிகள் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருந்திருந்தால் அவர்கள் தலையில் இந்த போர்டு விழுந்து உயிர் பலியே நிகழ்ந்திருக்கும். இதை ஒரு நொடியின் உள்வாங்கிய சண்டை போட்ட கணவர் நேரே போய் அந்தப் பாட்டிக்கு ஒரு அன்பு முத்தமும் கொடுத்தார். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :