உச்சத்தில் தக்காளி விலை.. தக்காளிக்காக நம்ம மக்கள் கூகுளில் தேடியது என்ன தெரியுமா? Description: உச்சத்தில் தக்காளி விலை.. தக்காளிக்காக நம்ம மக்கள் கூகுளில் தேடியது என்ன தெரியுமா?

உச்சத்தில் தக்காளி விலை.. தக்காளிக்காக நம்ம மக்கள் கூகுளில் தேடியது என்ன தெரியுமா?


உச்சத்தில் தக்காளி விலை.. தக்காளிக்காக நம்ம மக்கள் கூகுளில் தேடியது என்ன தெரியுமா?

முன்பெல்லாம் அரசியல் கட்சிக் கூட்டத்தில் பிடிக்காத கருத்தைப் பேசினாலோ, அல்லது பிடிக்காத பாடலை யாரும் பாடினாலோ தக்காளியை தூக்கி வீசுவார்கள். அவ்வளவு மலிவானப் பொருளான பொருளான தக்காளி இப்போது விலையில் உச்சம் தொட்டுள்ளது.

தக்காளி பொதுவாக நம் தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்தே அதிகளவு வரும். ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில் கனமழை பெய்வதன் காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளியில் விலை கூடியுள்ளது. இது பெட்ரோல், டீசல் விலையையே ஓவர்டேக் செய்துள்ளது. தக்காளி 150 ரூபாய் வரை விலையைத் தொட்டுள்ளது. இப்போது கூகுளில் தக்காளி விலை ஏற்றத்தால் நம்மவர்கள் செய்த ஒரு செயல் வைரல் ஆகிவருகிறது.

அப்படி என்ன செய்தார்கள் எனக் கேட்கிறீர்களா? தக்காளி இல்லாமல் சமையல் செய்வது எப்படி எனத் தேடியுள்ளனர். இதேபோல் முன்பெல்லாம் தக்காளி ஊறுகாய் தான் கடைகளில் தொங்கும். இப்போது தக்காளியே ஊறுகாய் போல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதேபோல் தக்காளி பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :