பிச்சைக்காரரின் இறப்புக்கு அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கான மக்கள்! மக்களின் மனங்களை பிச்சைக்காரர் வென்றது எப்படி? Description: பிச்சைக்காரரின் இறப்புக்கு அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கான மக்கள்! மக்களின் மனங்களை பிச்சைக்காரர் வென்றது எப்படி?

பிச்சைக்காரரின் இறப்புக்கு அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கான மக்கள்! மக்களின் மனங்களை பிச்சைக்காரர் வென்றது எப்படி?


பிச்சைக்காரரின் இறப்புக்கு அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கான மக்கள்!  மக்களின் மனங்களை பிச்சைக்காரர் வென்றது எப்படி?

மக்களுக்கு யாரை பிடிக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாத விசயம். சிலரை ஏன் பிடிக்கிறது என்றுகூடத் தெரியாமல் பலருக்கும் வெறித்தனமாகப் பிடிக்கும். அந்தவகையில் கர்நாடகாவில் ஒரு பிச்சைக்காரனை அனைத்து மக்களுக்கும் வெகுவாகப் பிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் சாலை விபத்தில் உயிர் இழந்த அவருக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். கர்நாடகா மாநிலத்தின் வல்லாரை மாவட்டம், ஹடாஹள்ளி நகர்ப்பகுதியில் பல வருடங்களாக தசவாய் என்பவர் பிச்சையெடுத்து வந்தார். மன நோயாளியான இவர் பொதுமக்களிடம் இருந்து ஒரு ரூபாய் மட்டுமே பிச்சையாகப் பெறுவார். அதற்கு மேல் யாரும் கொடுத்தால் கூட சில்லரையைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்.

இவர் சாலைவிபத்தில் உயிர் இழந்தார். இதனை அறிந்த அப்பகுதிவாசிகள் நகர் முழுவதும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர். 5000க்கும் அதிகமானோர் பொது இடத்தில் அவர் உடலை வைத்து அஞ்சலி செலுத்தினர். ஒரு பிச்சைக்காரர் மக்கள் மனதில் இவ்வளவு பெரிய இடம்பிடித்திருப்பது அனைவரையும் நெகிழ்ழியடையச் செய்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :