தாயைப் பிரிந்த கன்றுகுட்டி... போலீஸ்காரர் செய்த நெகிழ வைக்கும் செயல்... இந்த பாசத்தைப் பாருங்க உருகிடுவீங்க... Description: தாயைப் பிரிந்த கன்றுகுட்டி... போலீஸ்காரர் செய்த நெகிழ வைக்கும் செயல்... இந்த பாசத்தைப் பாருங்க உருகிடுவீங்க...

தாயைப் பிரிந்த கன்றுகுட்டி... போலீஸ்காரர் செய்த நெகிழ வைக்கும் செயல்... இந்த பாசத்தைப் பாருங்க உருகிடுவீங்க...


தாயைப் பிரிந்த கன்றுகுட்டி... போலீஸ்காரர் செய்த நெகிழ வைக்கும் செயல்... இந்த பாசத்தைப் பாருங்க உருகிடுவீங்க...

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களே இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்!

மனிதர்கள் மட்டும் தான் தங்கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் தாய்ப்பாசம்! சகல ஜீவன்களிலும் தங்கள் தாயை நேசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்.





எப்போதுமே தாய் பாசத்துக்கு பணம் பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு தாய் பாசம் உயர்ந்தது. அதை அப்படியே கண் முன்பு கொண்டுவந்து நிறுத்துவது போல் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சாவூரில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் டிரைடருக்கு இருபுறத்திலும் தாய் பசுவும், கன்றுக்குட்டியும் பிரிந்துவிட்டன. சாலையின் நடுவே தடுப்புக்கற்கள் இருந்ததால் தாய் பசுவால் குட்டியோடு சேர முடியவில்லை.

கன்றுக்குட்டியோ தன் தாய்ப்பசுவை ஏக்கத்தோடு பார்த்துவந்தது. இந்நிலையில் அந்த வழியாக வந்த போலீஸ்காரர் இளையராஜா என்பவர் இந்தக் காட்சியைப் பார்த்தார். அவர் முதலில் யதார்த்தமாக இதைப் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டாராம். சிறிதுதூரம் சென்றவர் தாயும், கன்றுக்குட்டியும் பிரிந்து தவிப்பதைப் பார்த்துவிட்டு தன் பைக்கை திருப்பிக் கொண்டு வந்தார். தொடர்ந்து சாலையில் டிவைடரின் ஒரு புறத்தில் நின்ற கன்றுக்குட்டியின் அருகிலேயே பைக்கில் சென்றார்.





கன்றுக்குட்டி நகர்ந்து, நகர்ந்து முன்னோக்கி செல்ல டிவைடரின் மறுபுறத்தில் இருந்த பசுவும் நகர்ந்தது. ஒருகட்டத்தில் டிவைடர் இல்லாத பகுதியில் இவை சேர்ந்து விட்டன. தாய் பசு, தன் குட்டியோடு உற்சாகமாகப் புறப்பட்டது. இந்தக் காட்சி இணையத்தில் இப்போது வைரல் ஆகிவருகிறது.

Video Credit : Polimer News


நண்பர்களுடன் பகிர :