விரதத்தில் இதையெல்லாம் செய்யாவிட்டால் விரதத்துக்கே பலனில்லை... ஆன்மிக ஆர்வலர்கள் மிஸ் செய்யவே கூடாத டிப்ஸ்..! Description: விரதத்தில் இதையெல்லாம் செய்யாவிட்டால் விரதத்துக்கே பலனில்லை... ஆன்மிக ஆர்வலர்கள் மிஸ் செய்யவே கூடாத டிப்ஸ்..!

விரதத்தில் இதையெல்லாம் செய்யாவிட்டால் விரதத்துக்கே பலனில்லை... ஆன்மிக ஆர்வலர்கள் மிஸ் செய்யவே கூடாத டிப்ஸ்..!


விரதத்தில் இதையெல்லாம் செய்யாவிட்டால் விரதத்துக்கே பலனில்லை... ஆன்மிக ஆர்வலர்கள் மிஸ் செய்யவே கூடாத டிப்ஸ்..!

பொதுவாகவே கடவுளிடம் வேண்டிக் கொண்டுவிரதம் இருப்பது அனைவருக்குமே பிடித்தமான விசயம் தான். அதை ஆன்மிக ரீதியாக கடவுளை நேசிப்பவர்கள் விருப்பத்தோடு மேற்கொள்வார்கள். ஆனால் எடுத்தோம்...கவிழ்த்தோம் என விரதம் இருக்கக் கூடாது அதற்கு சில நுட்பங்கள் இருக்கிறது.

நவராத்திரி விரதம்

அதாவது இந்த விரதத்தைப் பொறுத்தவரை புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதிவரை மகாசக்டி பார்வதி தேவியை நினைத்து முதல் 8 நாள்கள் பழ உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கவேண்டும். தொடர்ந்து 9வது நாளான மகாநவமி அன்று சுத்தமாக சாப்பிடாமல் முழு விரதம் இருந்தால் கல்வி, செல்வம் கிடைக்கும்.

கிருத்திகை விரதம்

ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரட்த்தன்று முருகப் பெருமானுக்காக இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சரியாக இந்த விரதத்தை தொடர்ந்து பன்னிரண்டு வருசம் அனுஷ்டித்தால் 16 வகையான செல்வத்தைப் பெறலாம்.

கேதார விரதம்

புரட்டாசி மாதத்தின் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தி வரை 21 நாள்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாள்களோ, அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரை 7 நாள்கள் ஆகியவை விரதத்திற்கு உரியவை. இதெல்லாம் விரதம் இருக்க முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும் விரதம் இருக்கலாம்.

இதேபோல் 21 இழையால் ஆன காப்பை பெண்கள் இடதுகையிலும், ஆண்கள் வலதுகையிலும் கட்டிக்கொண்டு கேதாரநாதருக்காக முதல் இருபதுநாள்கள் ஒருநேரம் மட்டும் உணவு, கூடவே கடைசிநாள் முழுவதும் உபவாசம் இருந்தால் தம்பதிகள் சேர்ந்து, சந்தோஷமாக நீண்ட நாள் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

தைப்பூச விரதம்

ஒவ்வொரு ஆண்டும் தைமாச பூச நட்சத்தித்தில் சிவபெருமானுக்காக இருக்கும் விரதம் இது. திருமண யோகம் கூடிவரும் இந்த விரதத்தில் காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்கவேண்டும்.

கந்த சஷ்டி

முருகப்பெருமானுக்காக இருக்கும் விரதம் இது. 6 நாள்கள் மொத்தமுள்ள விரதத்தில் முதல் 5 நாள்கள் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுதாக பட்டினி இருக்க வேண்டும். தொடர்ந்து மாலையில் சூரசம்ஹாரம் முடிந்த பின் வாழைப்பழம், பானகம் அருந்தி விரதத்தை முடிக்கலாம்.

தை அமாவாசை விரதம்

இந்த விரதம் சிவனை நினைத்து மேற்கொள்ளப்படுவது. அன்றைய தினம் காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் முன்னோருக்கு முத்தி கிடைக்கும். அவர்களது ஆசி உங்கள் குடும்பத்துக்குக் கிடைக்கும்.

பிரதோஷ விரதம்

சிவபெருமான், நந்திதேவரின் அருள்வேண்டி இருக்கும் விரதம் இது. சனிப்பிரதோஷம் முதலாவதாக தொடங்கும்போது சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதோ ஒன்றில் இந்த விரதத்தை துவங்கலாம். இந்த விரதத்தை ஆயுள் முழுவதும் அனுஷ்டிக்கலாம். இந்த விரதகாலத்தில் பகலில் எதுவும் சாப்பிடக் கூடாது. மாலையில் குளித்துவிட்டு சிவன் கோவில் சென்று பிரதோஷ வழிபாடு முடிந்துதான் சாப்பிடவேண்டும்.

இதையெல்லாம் பாளோ செய்தால் உங்கள் விரதமும் சக்சஸ் தான்!


நண்பர்களுடன் பகிர :