அய்யோ பாவம்.. இளம் நடிகை யாஷிகாவுக்கு இப்படியொரு நிலையா? தன்னுடைய நிலைமையை இன்ஸ்டாவில் பகிர்ந்த யாஷிகா..! Description: அய்யோ பாவம்.. இளம் நடிகை யாஷிகாவுக்கு இப்படியொரு நிலையா? தன்னுடைய நிலைமையை இன்ஸ்டாவில் பகிர்ந்த யாஷிகா..!

அய்யோ பாவம்.. இளம் நடிகை யாஷிகாவுக்கு இப்படியொரு நிலையா? தன்னுடைய நிலைமையை இன்ஸ்டாவில் பகிர்ந்த யாஷிகா..!


அய்யோ பாவம்.. இளம் நடிகை யாஷிகாவுக்கு இப்படியொரு நிலையா? தன்னுடைய நிலைமையை இன்ஸ்டாவில் பகிர்ந்த யாஷிகா..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலம் இவருக்கென்று எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்தனர்.அதனைத் தொடர்ந்து ஒருசில படங்களில் ஹீரோயினாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும், ஒரு பாடலுக்கு நடனம் என்றும் தொடர்ந்து நடித்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்தது யாஷிகா ஆனந்தை பெரிய அளவில் ஹிட் ஆக்கியது. அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி இரவு, கிழக்குக் கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது இவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் இவரது தோழி பவானி விபத்து நடந்த இடத்திலேயே பலியானார். இதில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்திற்கு ஆப்ரேசன் முடிந்துள்ளது. இந்நிலையில் தன் ஹெல்த் கண்டிசன் குறித்து அவர் அப்டேட் கொடுத்துள்ளார்.

அதில், ‘எனக்கு விபத்து இடுப்பு எழுப்பில் பல இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. வலது கால் எலும்பும் முறிந்துவிட்டது. அறுவை சிகிட்சை முடிந்து இப்போது ஓய்வில் இருக்கிறேன். அடுத்த 5 மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. நான் நாள் முழுக்க படுத்த படுக்கையாக இருக்கிறேன். படுக்கையில் தான் மோஷன் போகிறேன். என்னால் இடது, வலது என திரும்ப முடியவில்லை. முதுகிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இது எனக்கு மறுபிறப்பு. அதிர்ஷ்டவசமாக என் முகத்தில் எதுவும் காயம்படவில்லை.’என சொல்லியிருக்கிறார். பீக்கில் வர வேண்டியவரின் வாழ்க்கையில் இப்படி ஆகிவிட்டதே என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :