வெளுத்து வாங்கும் வெயில்.. உடம்பை குளிர்ச்சியாக வச்சிக்க இந்த உணவுகள மறக்காம சாப்பிடுங்க..! Description: வெளுத்து வாங்கும் வெயில்.. உடம்பை குளிர்ச்சியாக வச்சிக்க இந்த உணவுகள மறக்காம சாப்பிடுங்க..!

வெளுத்து வாங்கும் வெயில்.. உடம்பை குளிர்ச்சியாக வச்சிக்க இந்த உணவுகள மறக்காம சாப்பிடுங்க..!


வெளுத்து வாங்கும் வெயில்.. உடம்பை குளிர்ச்சியாக வச்சிக்க இந்த உணவுகள மறக்காம சாப்பிடுங்க..!

கோடை வெயிலின் உக்கிரம் பயமுறுத்துகிறது. வீடை விட்டி வெளியேவே செல்ல முடியாமல் பலரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அப்படியான சூழலில் இந்த கோடை வெயிலை எப்படி எதிர்கொள்வது, என்ன வகையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி டெல்சியஸ். சுற்றுப்புறத்தில் இருக்கும் வெப்பநிலை நம் சராசரி வெப்பநிலையை விட அதிகரிக்கும் போது, நமக்கு வியர்வை ஏற்படுகிறது. இந்த வியர்வையினால் உப்பு, நீர்ச்சத்தும் போய் விடுகிறது. இதனால் கோடையில் அதிக தாகம், தலைவலி,சோர்வு, தலைசுற்றல், குறைவாக சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை ஏற்படும்

இந்த கோடை பச்சிளம் குழந்தைகள், வளரிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்களை வெகுவாக பாதிக்கும். வெளிர் மஞ்சள் நிறத்தில் கோடையில் சிறுநீர் செல்ல வேண்டும். அப்போது தான் நாம் ஆரோக்கியமான அளவுக்கு தண்ணீர் குடிக்கிறோம் என்பது தெரியும். நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதே ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.இதேபோல் கோடை வெயிலை சமாளிக்க சில உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இனி அதைப் பற்றிப் பார்ப்போம்.

கோடைக்கு ஏற்ற உணவுகளில் முக்கியமானது வெள்ளரி. இது உடலுக்கு குளிர்ச்சிதரும். கோடையில் ஏற்படும் நீர்சத்து குறைவை இதுதடுக்கும். இதில் குறைந்தளவு கலோரியே இருப்பதால் உடலின் நீர்சத்து பாதுகாக்கப்படுவதோடு, உடல் எடையும் குறையும். இதேபோல் தர்பூசணி, முலாம்பழம், கிரிணி பழம் ஆகியவையும் உடலுக்கு குளிர்ச்சித்தரும். இவை செரிமானத்தையும் மேம்படுத்தும். இதேபோல் கோடைகாலத்தில் அதிகமாக தயிர் எடுத்துக்கொள்ள வேண்டும். இது செரிமான மண்டலத்தில் மந்தத்தை ஏற்படுத்தி உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். இதேபோல் மோரும் உடலுக்கு குளிர்ச்சி தரும். கோடையில் அதிகளவு மோர் குடிக்கலாம்.

இந்த வெயில் காலத்தில் புதினா உடலுக்கு குளிர்ச்சித்தரும். இதனால் புதினா தேநீர், புதினா துவையல், புதினா சட்னி என ஏதாவது ஒருவகையில் புதினாவை எடுத்துக்கொண்டால் உடலுக்கு குளிர்ச்சியைத்தரும். கூடவே புதினா செரிமானத்திற்கும் பெரிதும் உதவும். அலர்ஜி, தலைவலி, வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திலும் புதினா முக்கியப்பங்கு வகிக்கிறது.


நண்பர்களுடன் பகிர :