ஐஸ் க்ரீம் போல் இனிக்கும் நில நிற வாழைப்பழம் பற்றித் தெரியுமா? அடேங்கப்பா இதில் இவ்வளவு சத்துக்களா? Description: ஐஸ் க்ரீம் போல் இனிக்கும் நில நிற வாழைப்பழம் பற்றித் தெரியுமா? அடேங்கப்பா இதில் இவ்வளவு சத்துக்களா?

ஐஸ் க்ரீம் போல் இனிக்கும் நில நிற வாழைப்பழம் பற்றித் தெரியுமா? அடேங்கப்பா இதில் இவ்வளவு சத்துக்களா?


ஐஸ் க்ரீம் போல் இனிக்கும் நில நிற வாழைப்பழம் பற்றித் தெரியுமா? அடேங்கப்பா இதில் இவ்வளவு சத்துக்களா?

பழங்கள் பொதுவாகவே உடலுக்கு மிகவும் நல்லது.அதிலும் மலச்சிக்கலைத் தீர்ப்பதில் பழங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிலும் வாழைப் பழம் பெரிய விலை இன்றி எளிய மக்களும் வாங்கி சாப்பிடக் கூடியது. மொரீஸ், பேயன்பழம் என பல வகைப் பழங்களும் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும். செவ்வாழைப் பழமானது, சிவப்பு நிறத்தில் இருக்கும். பச்சை வாழை, பவ்சை நிறத்தில் இருக்கும்.

ஆனால் முழுக்க நீல நிறத்தில் ஒரு பழம் இருக்கிறதென்றால் ஆச்சர்யமான விசயம் தானே? இந்த பழத்தின் தோல் மட்டுமல்ல, பழமும்கூட முழுக்க நீல நிறத்திலேயே இருக்கும். இந்த பழத்தை சாப்பிட்டால் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதுபோல் இருக்கிறது. இந்த நீல நிற பழத்தை, ப்ளூ ஜாவா பழம் என்கிறார்கள். இந்த ரக பழங்கள் தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் அதிகம் விளைகிறது. நீல நிறவாழை அதிகளவு குளிர்ச்சியைத் தாங்குவதால் உறைபனிக்குக் கீழ் உள்ள வெப்பநிலையிலும் வளரும். பொதுவாக இதன் வளர்ச்சிக்கு ஏற்ற வெப்பநிலை 40 எப் ஆகும்.

இந்த நீல நிற பழத்தில் வைட்டமின் பி 6, வைட்டமின் சி, நார்ச்சத்து, மாங்கனீசு ஆகியவை அதிகம் உள்ளது. அதேபோல் குறைந்தளவில் இரும்பு, பாஸ்பரஸ், தியோமின், செலினியம் ஆகியவையும் உள்ளது. இந்த பழத்தின் ருசியின் காரணமாக வெளிநாட்டினர் இதை பெரிதும் விரும்புகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :