தலைவா படத்தில் வந்த இவரை நினைவில் இருக்கிறதா? நிஜமாகவே இவர் யார்? என்ன செய்கிறார் தெரியுமா? Description: தலைவா படத்தில் வந்த இவரை நினைவில் இருக்கிறதா? நிஜமாகவே இவர் யார்? என்ன செய்கிறார் தெரியுமா?

தலைவா படத்தில் வந்த இவரை நினைவில் இருக்கிறதா? நிஜமாகவே இவர் யார்? என்ன செய்கிறார் தெரியுமா?


தலைவா படத்தில் வந்த இவரை நினைவில் இருக்கிறதா? நிஜமாகவே இவர் யார்? என்ன செய்கிறார் தெரியுமா?

தலைவா படம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ஹிட். இளையதளபதி விஜய், அமலாபால், சந்தானம் நடிப்பில் உருவான இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்தப்படத்தில் அமலாபால் தன் காதலர் என ஒருவரை இளைய தளபதி விஜய்க்கு அறிமுகம் செய்வார். காமெடி பீஸ் போல் இருக்கும் அவர் நிஜமாகவே யார் என்னும் தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

அவரது இயற்பெயர் ஆண்டர்சன் சாமுவேல். அவர் சினிமாவுக்காக தன் பெயரை சாம் ஆண்டர்சன் என மாற்றினார். கடந்த 2017 இல் வெளியான யாருக்கு யாரோ படத்தில் நடித்திருந்தார். இவரது மாறுபட்ட நடனம் காமெடியாக இருந்ததால் யூடிப்பில் இவர் ரொம்ப பேமஸ் ஆனார். ஈரோட்டை பூர்வீகமாகக் கொண்ட இவர், கூரியர் டெலிவரி கம்பெனி ஒன்றை நடத்திவந்தார். 2001ல் வெளியான பிரசாந்தின் சாக்லேட் படத்தைப் பார்த்து இம்பிரஸ் ஆகித்தான் சினி பீல்டுக்கு வந்தாராம்.

இதுபற்றி அண்மையில் மனம் திறந்திருக்கும் ஆண்டர்சன் சாமுவேல், ‘என் வீட்டுக்கு நான் மூத்தபையன். எனக்குப் பின்னாடி ஒரு தம்பி இருக்கான். மெக்கானிக் இஞ்சினியர் வேலை செஞ்சேன். சொந்த பிஸ்னஸ் ஆர்வம் இருந்துச்சு. ஏற்கனவே கூரியர் கம்பெனியில் வேலை செஞ்சதால சொந்தமா கூரியர் கம்பெனி ஆரம்பிச்சேன். என் தாத்தாவுக்கு நான் சினிமாவுல நடிக்கணும்ன்னு ஆசை.

என் பெரியப்பாவுக்கும் சினிமா தயாரிக்கணும்ன்னு ஆசை. அதான் படம் பண்ணிட்டோம். எனக்கும் விஜய் சாருக்குமான தலைவா பட காட்சிகளை ஆஸ்திரேலியாவுல ஷீட் பண்ணாங்க. சிட்னிக்கு நான் போய் இறங்கும்போதே தலைவா சூட்டிங் போயிட்டு இருந்துச்சு. ஒரு ஓரமா ஷேர் ல இருந்து பார்த்தேன். நடிகர் விஜய் சாரும், டைரக்டர் விஜய் சாரும் வந்து கைகொடுத்து பேசுனாங்க. இரண்டு பேரும் அவ்வளவு எளிமை’ என சிலாகிக்கிறார்.

இப்போதும் தன் சொந்த கூரியர் சர்வீஸை நடத்தும் இவர் சீக்கிரம் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என கங்கனம் கட்டி நிற்கிறார்.


நண்பர்களுடன் பகிர :