செம ஸ்டைலாக அடையாளமே தெரியாமல் மாறிய நடிகர் பிரசாந்த்... இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க..! Description: செம ஸ்டைலாக அடையாளமே தெரியாமல் மாறிய நடிகர் பிரசாந்த்... இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க..!

செம ஸ்டைலாக அடையாளமே தெரியாமல் மாறிய நடிகர் பிரசாந்த்... இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க..!


செம ஸ்டைலாக அடையாளமே தெரியாமல் மாறிய நடிகர் பிரசாந்த்... இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகர்களில் ஒருவர் பிரசாந்த். டாப்ஸ்டார் என தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட பிரசாந்த்க்கு அண்மைக்காலமாக தொடர்ந்து திரையுலகில் இறங்குமுகம்தான்.

அவரது திரைப்படங்கள் பெரிதாக போகாமல் அவரே மிகவும் சோர்ந்து போய் இருந்தார். தமிழில் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பது என்பதில் பிரசாந்த் உறுதியாக இருந்ததால் அவருக்கு துணை கேரக்டர்களும் அமையவில்லை. உலக அழகி ஐஸ்வர்யா ராயோடு ஜீன்ஸ் படத்தில் நடித்து கவனம் குவித்த பிரசாந்த்க்கு, கடைசியில் வெளியான ஜானி படமும் கைகொடுக்கவில்லை.

ஒருகாலத்தில் பிரசாந்த் படத்தின் பாடல்கள் ஒலிக்காத திருமணவீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. தமிழில் பிரசாந்த்க்கு பெரியவாய்ப்பு இல்லாத நிலையில் தெலுங்குப் பக்கம் தாவினார் பிரசாந்த். அங்கு அவர் வினைய விதேய ராமா படத்தில் துணை நடிகராக நடித்ததைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் பிரசாந்த் இந்தியில் பிரபல இயக்குனர் ஆயுஸ்மான் குரானா இயக்கி ஹிட் அடித்த அந்ததுன் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். அதன் காப்பி ரைட்டையும் அவரே வாங்கி இருக்கிறார். இந்த படம் நடிகர் பிரசாந்த்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

இந்த படத்துக்காக தன் உடல் எடையை கணிசமாகக் குறைத்து பழைய பிரசாந்தாக நச்சென மாறி இருக்கிறார் நடிகர் பிரசாந்த். சிறந்த இந்தி மொழி திரைப்படம், சிறந்த நடிகர் விருது, சிறந்த திரைக்கதை விருது என வாங்கிக்குவித்த இந்தபடத்தை அந்தகன் என்னும் பெயரில் சூட் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் ஹீரோவாக நடிக்கிறார் பிரசாந்த். இந்தப்படத்தில் நடிகை சிம்ரன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் முக்கியப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப்படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகரஜனே இயக்குகிறார், முன்பு அமுல்பேபியாக...சாக்லேட் நாயகனாக வலம்வந்த பிரசாந்த் இந்தப்படத்துக்காக மீண்டும் நச்சென மாறியுள்ளார். இந்நிலையில் நடிகர் பிரசாந்த் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கியதாக தன் சமூகவலைதளப்பக்கத்தில் பதிவுபோட அது செம வைரல் ஆகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :