உலகிலேயே மிக அதிக குண்டான சிறுவன்.. தற்போது எப்படி இருக்காருன்னு பாருங்க.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..! Description: உலகிலேயே மிக அதிக குண்டான சிறுவன்.. தற்போது எப்படி இருக்காருன்னு பாருங்க.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!

உலகிலேயே மிக அதிக குண்டான சிறுவன்.. தற்போது எப்படி இருக்காருன்னு பாருங்க.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!


உலகிலேயே மிக அதிக குண்டான சிறுவன்.. தற்போது எப்படி இருக்காருன்னு பாருங்க.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!

சிலர் மிகவும் ஒல்லியாக இருப்பார்கள். அவர்களுக்கு கொஞ்சம் குண்டானால் நன்றாக இருக்குமே எனத் தோன்றும். சிலர் அதீத குண்டாக இருப்பார்கள். அது பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். குண்டாக இருப்பது எப்போதுமே மிகவும் ஆபத்தான விசயம் தான்.

இதோ இங்கேயும் அப்படித்தான் உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவனாக இந்தோனேஷியாவை சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர் இப்போது தன் உடல் எடையை வெகுவாகக் குறைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 11 வயதிலேயே அந்த பொடியன் 190 கிலோ எடை இருந்தார். அவரது பெயர் ஆர்யா பெர்மனா. தொடர் பயிற்சிகளின் மூலம் தற்போது 14 வயதில் பாதிக்கும் மேல் தன் உடல் எடையைக் குறைத்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார்.

அதீத குண்டாக இருப்பதால் ஆர்யாவுக்கு உடலும் சூடாகி இருக்குமாம். இந்த சூட்டைத் தணிக்க அவர் தண்ணீர் தொட்டி ஒன்றில் கிடத்தப்பட்டிருக்கும் காட்சி முன்பு வெளியானது. இதைப் பார்த்து மருத்துவர்களே ஷாக் ஆகினர். இப்படித்தான் அவர் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் அதீத உடல் எடையால் பள்ளிக்கூடத்துக்குக் கூட ஆர்யாவால் போக முடியவில்லை. இந்நிலையில் டாக்டர்கள் ஆப்ரேசன் செய்து, இரைப்பையின் அளவைக் குறைத்தனர்.

இரப்பையின் அளவைக் குறைத்ததால் ஆர்யாவின் உணவு எடுத்துக்கொள்ளும் அளவும் குறையும். ஆப்ரேசன் செய்த மூன்றாவது வாரத்தில் 186வது கிலோவில் இருந்து, 169 வது கிலோவாகக் குறைந்தது. தொடந்து உணவுகட்டுப்பாடு, மற்றும் தொடர்ந்து எக்சர்ஸைஸ் செய்து தன் உடல் எடையைக் குறைக்க 82 கிலோவாகக் குறைத்துள்ளார். இப்போது ஆர்யா செம ஸ்வீட்டாக சைக்கிள் ஓட்டுகிறார். தினமும் கூடைப்பந்து விளையாடுகிறார்.

வீட்டில் இருந்து மூன்றுகிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கும் நடந்தே செல்கிறார் ஆர்யா..மொத்தத்தில் ஆர்யா எடையைக் குறைத்து அசத்துகிறார்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :