‘தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற என்னை’..நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம்..! Description: ‘தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற என்னை’..நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம்..!

‘தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற என்னை’..நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம்..!


‘தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற என்னை’..நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம்..!

இளவயது, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சகலதரப்பிலும் மிகப்பெரிய ரசிகர் படையை வைத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் வாழ்வைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் இந்த முன்னேற்றத்துக்கு அவரது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே காரணம். சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தைத் தொடர்ந்து தற்போது டாக்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்போது நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டிருப்பது வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தமிழகத்தில் இயல், இசை, நாடகம், சினிமா, சின்னத்திரை, நாட்டுப்புறக் கலைகளில் சிறந்த பங்களிப்பை அளிப்போருக்கு தமிழக அரசின் கலை மற்றும் கலாச்சாரத்துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மூத்த நடிகைகள் சரோஜா தேவி, செளகார் ஜானகி, ஜஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, கலைபுலி தாணு வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் வழங்கப்பட்டது.

விருது வாங்கிய கையோடு தன் தாயிடம் அதைக் கொடுத்து ஆசிவாங்கிய சிவகார்த்திகேயன் ட்விட்டரில் அதுதொடர்பாக ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார். அதில், ‘சாமானியனையும், சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருது அளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்துப்பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்.’’என அதில் கூறப்பட்டுள்ளது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :