என் நண்பனுக்கு ஒன்னுன்னா விட்டுருவோமா? நாய்கள் செய்த தரமான சம்பவம்...! Description: என் நண்பனுக்கு ஒன்னுன்னா விட்டுருவோமா? நாய்கள் செய்த தரமான சம்பவம்...!

என் நண்பனுக்கு ஒன்னுன்னா விட்டுருவோமா? நாய்கள் செய்த தரமான சம்பவம்...!


என் நண்பனுக்கு ஒன்னுன்னா விட்டுருவோமா? நாய்கள் செய்த தரமான சம்பவம்...!

நாய்கள் மிகவும் நன்றியுள்ளவை. தங்கள் எஜமானர்கள் மீது அன்பு வைப்பதில் நாய்களுக்கு இணையாக எந்த பிராணிகளையும் சொல்ல முடியாது. அவர்களுக்கு ஒரு ஆபத்து என்றாலும் உடனே தன் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் நாய்கள் ஓடிவந்துவிடும். அதனால் தான் பெரும்பாலான வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள்.

அதிலும் வீட்டில் வளர்க்கும் நாயைப் பார்த்தால் தெருநாய்கள் குரைப்பதும், ஒரு தெருவில் இருந்து அடுத்தத் தெருவுக்கு புதுவரவாக எதுவும் நாய் வந்துவிட்டால் அந்தத் தெருவில் இருக்கும் அனைத்து நாய்கள் சேர்ந்து குரைத்தே விரட்டுவதையும் பார்த்திருப்போம். அதனால் தான் யாரேனும் ஒருவரை திட்டினால் கூட ‘சூரியனைப் பார்த்து நாய் குழைப்பதைப் போல’ என பகடியாகச் சொல்கிறோம். அந்த வகையில் இங்கேயும் ஒரு நாய் செய்த செயல் செம வைரலாகி வருகிறது.

பொதுவாக மனிதர்கள் கூட அக்கம்,பக்கத்தில் சண்டை நடந்தால் எட்டிக்கூடப் பார்ப்பது இல்லை. ஆனால் நாய்கள் அப்படி அல்ல. தனக்குத் தெரிந்த ஒரு நாயை, ஒன்னொரு தெரியாத நாய் சண்டைக்கு அழைத்தால் மற்ற நாய்களும் சேர்ந்து விடுவதுண்டு. இங்கேயும் அப்படித்தான். ஒரு நாய், ஒரு குட்டி நாயை துரத்திக் கொண்டு ஓடியது. குட்டி நாயும் பயந்து ஓடியது. ஒரு சந்துக்குள் திரும்பியதும் அதன் நண்பர்களையும், அதனோடு பிறந்த நாய்க்குட்டிகளையும் சேர்த்துக்கொண்டு குட்டி நாய்கள் கூட்டமாகத் துரத்த துரத்தி சென்ற பெரிய நாய் பயத்தில் ஓட்டம் பிடிக்கிறது. இணையத்தில் இந்த காட்சிகள் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.


நண்பர்களுடன் பகிர :