ஹீராவாக நடிக்கும் திண்டுக்கல் லியோனியின் மகன்.. அடடே எவ்வளவு அழகு பாருங்க.. தயாரிப்பாளர் யார் தெரியுமா? Description: ஹீராவாக நடிக்கும் திண்டுக்கல் லியோனியின் மகன்.. அடடே எவ்வளவு அழகு பாருங்க.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?

ஹீராவாக நடிக்கும் திண்டுக்கல் லியோனியின் மகன்.. அடடே எவ்வளவு அழகு பாருங்க.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?


ஹீராவாக நடிக்கும் திண்டுக்கல் லியோனியின் மகன்.. அடடே எவ்வளவு அழகு பாருங்க..  தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திண்டுக்கல் ஐ.லியோனிக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. தன் பட்டி,மன்றங்களின் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் இவர் ரொம்பவே பேமஸ். கல்லூரி ஆசிரியரான இவர் மேடப்பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் என்பதையெல்லாம் தாண்டி திமுகவில் நட்சத்திரப் பேச்சாளராக இருக்கிறார். இவரது பேச்சை பலரும் ரசித்துக் கேட்கின்றனர். இவர் பேசும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.





கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது பெற்றிருக்கும் திண்டுக்கல் லியோனிக்கு சினிமா மீதும் காதல் உண்டு. இவர் கங்கா கெளரி என்னும் படத்திலும் நடித்திருந்தார். ஆனால் தொடர்ந்து சொல்லிக்கொள்ளும்படி திரைவாய்ப்பு எதுவும் வரவில்லை. இவரது சினிமா மீதான தீராக்காதலை இப்போது இவரது மகன் தீர்த்து வைத்துள்ளார்.





ஆம்..லியோனியின் மகன், லியோ சிவக்குமார் ‘அழகிய கண்ணே’ என்னும் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார். இன்று முதல் இந்தப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்குகிறது. இந்தப்படத்துக்கான பூஜையில் திண்டுக்கல் லியோனி குடும்பத்துடன் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.






நண்பர்களுடன் பகிர :