சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் புரோட்டா சூரி.. என்ன சீரியல் தெரியுமா? யார் கூட நடிச்சுருக்காருன்னு பாருங்க..! Description: சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் புரோட்டா சூரி.. என்ன சீரியல் தெரியுமா? யார் கூட நடிச்சுருக்காருன்னு பாருங்க..!

சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் புரோட்டா சூரி.. என்ன சீரியல் தெரியுமா? யார் கூட நடிச்சுருக்காருன்னு பாருங்க..!


சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் புரோட்டா சூரி.. என்ன சீரியல் தெரியுமா? யார் கூட நடிச்சுருக்காருன்னு பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் நகைச்சுவை நடிகர்களில் சூரியும் ஒருவர். இதுவரை காமெடியனாகவே நடித்துவந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார்.





தமிழர்களுக்கு புரோட்டாவைப் பார்த்தாலே இப்போதெல்லாம் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா சூரியின் காமெடிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பரோட்டா சூரி இப்போது பேமஸ். ஆனால் மனிதரின் ஆரம்பகால வாழ்க்கை ரொம்பவே பரிதாபமானது. லாரியில் கிளீனராகக்கூட வேலைசெய்து பலகட்ட போராட்டங்களுக்கு பின்புதான் திரைத்துறையில் நுழைந்தார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பித்த சமயத்தில் வீட்டில் இருந்த சூரி, தன் வீட்டு குழந்தைகளோடு சேர்ந்து கரோனா விழிப்புணர்வு வீடியோவையும் தொடர்ந்து வெளியிட்டார். தன் சொந்த ஊர் மக்களுக்கும் நிதி உதவி செய்திருந்தார் சூரி. அதன் தொடர்ச்சியாக சினிமா வாய்ப்பு இல்லாததால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பெப்சி திரைத் தொழிலாளர்களுக்கு 25 கிலோ அரிசி வீதம் 100 பேருக்கு வழங்கினார். இதேபோல் துணை நடிகர் சங்கத்துக்கு 25 கிலோ வீதம் 20 மூடை வழங்கியுள்ளார்.இந்த அளவுக்கு இன்று உதவியும், நேசமும் காட்டிவரும் சூரி மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைக்கு உயர்ந்தார்.





இப்போது சினிமாவைத்தாண்டி சில இடங்களில் உணவகமும் நடத்திவருகிறார் சூரி. சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு தான் சூரிக்கு அறிமுகப்படம். ஆனால் அதற்கும் முன்பே சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் நடித்திருக்கிறார் சூரி. மெக்கானிக் செட்டில் வேலை செய்யும் செல்வத்துக்கு உதவி செய்யும் கேரக்டரில் வருவார் சூரி. இதில் செல்வமாக தளபதி விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சய் நடித்திருந்தார். இப்போது இந்த சீரியல் காட்சிகளில் சூரி நடித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.






நண்பர்களுடன் பகிர :