பத்துலட்சம் பேர் பார்த்த குடிமகனின் அசாத்திய குடி கவிதை... வைரமுத்துவையே கவிதையில் மிஞ்சிடுவாரு போலயே..! Description: பத்துலட்சம் பேர் பார்த்த குடிமகனின் அசாத்திய குடி கவிதை... வைரமுத்துவையே கவிதையில் மிஞ்சிடுவாரு போலயே..!

பத்துலட்சம் பேர் பார்த்த குடிமகனின் அசாத்திய குடி கவிதை... வைரமுத்துவையே கவிதையில் மிஞ்சிடுவாரு போலயே..!


பத்துலட்சம் பேர் பார்த்த குடிமகனின் அசாத்திய குடி கவிதை... வைரமுத்துவையே கவிதையில் மிஞ்சிடுவாரு போலயே..!

மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு என சாராயக் கடைகளிலேயே எழுதிவைத்திருந்தாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் சிலருக்கு நாலு ரவுண்ட்ஸ் உள்ளே போய்விட்டாலே கவிதையாக வந்து கொட்டும்.

சாமானிய நேரத்தில் இருப்பதை விட அதுபோன்ற தருணங்களில் ரொம்பவே தத்துவார்த்தமாகப் பேசுவார்கள். உள்ளூர் விவகாரம், முதல் உலக அரசியல் வரை புட்டு, புட்டு வைப்பார்கள். இங்கேயும் அப்படித்தான். ஒரு வயதான குடிமகன் குவாட்டர் பாட்டிலையும், வாட்டர் பாட்டிலையும் மிக்ஸ் செய்துவிட்டு கவிதையாகக் கொட்டுகிறார். அதைக் கேட்டாலே ப்பா..யாருப்பா இவர்? என்ன ஒரு கவிதைத் திறமைன்னு நம்மையும் அறியாமல் சொக்கிப் போய்விடுவோம்.

பொதுவாக குடித்துவிட்டு முன்னுக்கு பின் சிலர் உளறுவார்கள். ஆனால் இந்த வயதான குடிமகன் எதுகை, மோனையில் டி.ஆரையும், கவிதை எழுதுவதில் வைரமுத்துவையும் மிஞ்சிட்டாரு. ‘’குடிக்காதவன் யார் உலகத்திலே...கொண்டு வந்து நிறுத்து பக்கத்திலே..எல்லாரும் குடிக்குறான் மொத்தத்திலே..’’எனத் தொடங்கும் அவரது செமையான கவிதை வீடியோ இதோ..நீங்களே இவரது திறமையில் மயங்கிப் போவீர்கள். கையில் இருக்கும் பாட்டிலை தூக்கி வீசிவிட்டு பாட்டெழுத வாங்க தாத்தா..என நெட்டிசன்கள் இவரை பாராட்டுமழையில் நனைய வைத்துவருகின்றனர்.

இதோ அந்த வீடியோ...நீங்களே பாருங்கள்..


நண்பர்களுடன் பகிர :