பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது? திருமணத்தின் போது எப்படி இருக்காருன்னு பாருங்க...! Description: பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது? திருமணத்தின் போது எப்படி இருக்காருன்னு பாருங்க...!

பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது? திருமணத்தின் போது எப்படி இருக்காருன்னு பாருங்க...!


பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது?  திருமணத்தின் போது எப்படி இருக்காருன்னு பாருங்க...!

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. இதன் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா இதன் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அதேபோல் ரைசா_ஹரீஸ் ஜோடி பியார் பிரேமம் காதல் படத்தில் நடித்தனர். தொடந்து அவர் நடித்த தாராள பிரபு படமும் ஹிட் அடித்தது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பேமஸ் ஆகிவிடலாம் என்பது பலரது நம்பிக்கை.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. இந்த சீசனில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று இஉந்தார். சுரேஷ் சக்கரவர்த்தி திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய ‘அழகன்’ படத்திலும் நடித்திருந்தார். ஒருகாலத்தில் சக்கைபோடு போட்ட சன் டிவியின் பெப்சி உங்கள் சாய்ஸ் இயக்குனராகவும் இருந்தார்.

இதேபோல் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எனக்குள் ஒருத்தி’ தொடரை இயக்கி நடித்தார். இப்போது சுரேஷ் சக்கரவர்த்தி தனது திருமணத்தின் போது மனைவியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப்புகைப்படத்தை தனது திருமண நாளன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் இவர், என்னுடன் 30 வருட வாழ்க்கை சாதாரணமானது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அடடே இது நம்ம சுரேஷ் சக்கரவர்த்தியா? தலைநிறைய முடியோடு திருமணத்தின் போது நச்சுன்னு இருக்காரே என ஆச்சர்யத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :