பிக்பாஸில் இருந்துவந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாலாஜி.. வக்கீல் நோட்டீஸால் அலறல்! Description: பிக்பாஸில் இருந்துவந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாலாஜி.. வக்கீல் நோட்டீஸால் அலறல்!

பிக்பாஸில் இருந்துவந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாலாஜி.. வக்கீல் நோட்டீஸால் அலறல்!


பிக்பாஸில்  இருந்துவந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாலாஜி.. வக்கீல் நோட்டீஸால் அலறல்!

பிக்பாஸ் இல்லத்தில் இருந்துவிட்டால் மக்கள் மத்தியில் செம மாஸ் ஆகிவிடுகிறது. இதனாலேயே பலரும் பிக்பாஸ் இல்லத்துக்கு போக ஆசைப்படுகின்றனர். பிக்பாஸ் ஷோவில் பங்கேற்ற ஓவியா, ஆரவ், ஹரீஸ் கல்யாண், ரைசா, சேரன் உள்பட பலருக்கும் வெளியே சென்ற பின் பட வாய்ப்புகள் வாய்த்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை வெற்றிகரமாக 4 சீசன்களை நிறைவு செய்து இருக்கிறது.

இந்த சீசன் நான்கில் ஆரி டைட்டின் வின் செய்தார். பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடத்துக்கு வந்தார். பிக்பாஸ் வீட்டில் எப்போதுமே பாலாஜி சர்ச்சியைச் சுற்றியே வலம்வந்தார். சனம் ஷெட்டிக்கும் பாலாஜிக்கும் இடையே கடுமையான சண்டையும் நடந்தது. குறிப்பாக சனம் ஷெட்டி அழகிப்போட்டியில் சில சமரசம் செய்துதான் வெற்றிபெற்றதாகவும், அவருக்கு விருது கொடுத்தது டுபாக்கூர் நிறுவனம் என்றும் சொன்னார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பாலாஜி வெளியே வந்த நிலையில் ஷனம் செட்டிக்கு விருது கொடுத்த அழகிப் போட்டியை நடத்திய நிறுவனம், பாலாஜிக்கு தன் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்நிறுவன உரிமையாளர் ஜோ மைக்கேல் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். கூடவே பாலாஜியின் வாட்ஸ் அப் எண்ணுக்கும் அதை அனுப்பி இருக்கிறார். கூடவே, தன் சோசியல் மீடியா பக்கத்தில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர், ‘தம்பிகளா 2 நாள்ல சிங்கம் வரும்ன்னு சொன்னாங்க. எங்கையாவது பார்த்தீங்களா? இதுல தனுஷ் சார் டயலாக் வேற..’’ன்னு கேலி செய்து போட்டுள்ளார். கூடவே பயில்வான் ரங்கராஜனுக்கும் ப்ரூப் காட்டுங்கன்னு சொல்லி வெளுத்து வாங்கியிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :