பிச்சையெடுத்த கண் தெரியாத பாட்டி.. இளைஞர் செய்த வேற லெவல் வேலை.. பாருங்க, நீங்களே வாழ்த்துவீங்க..! Description: பிச்சையெடுத்த கண் தெரியாத பாட்டி.. இளைஞர் செய்த வேற லெவல் வேலை.. பாருங்க, நீங்களே வாழ்த்துவீங்க..!

பிச்சையெடுத்த கண் தெரியாத பாட்டி.. இளைஞர் செய்த வேற லெவல் வேலை.. பாருங்க, நீங்களே வாழ்த்துவீங்க..!


பிச்சையெடுத்த கண் தெரியாத பாட்டி.. இளைஞர் செய்த வேற லெவல் வேலை.. பாருங்க, நீங்களே வாழ்த்துவீங்க..!

வழக்கமாக நாம் சாலையில் செல்லும் போது வழியில் பிச்சையெடுக்கும் பலரையும் பார்த்திருக்கிறோம். ஆனால் அதை நாம் பெரிதாக சட்டை செய்வதில்லை. அய்யோ பாவம் என சிலநேரங்களில் பாக்கெட்டில் இருக்கும் சில்லரை காசை எடுத்துக் கொடுப்போம். அவ்வளவுதான். ஆனால் இங்கே ஒரு இளைஞர் செய்திருக்கும் செயலை வேற லெவல் என்றே சொல்லி விடலாம்.

அப்படி அந்த இளைஞர் என்ன செய்து இருக்கிறார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். சென்னையில் சப்வே எனப்படும் சுரங்கப்பாதை ஒன்றில் கண் தெரியாத பாட்டி, நின்று பிச்சையெடுத்துக் கொண்டு இருந்தார். அதை அந்த சப்வேயின் வழியாகச் சென்ற இளைஞர் ஒருவர் பிச்சையெடுக்கும் பாட்டியைப் பார்த்தார். சிறிது நேரத்திலேயே கையில் ஒரு பொருளுடன் வந்தார் அந்த வாலிபர். அதற்குள் எடை பார்க்கும் மிஷின் இருந்தது.

அந்த மிஷினை பார்வையற்ற பாட்டிக்கு வாங்கிக்கொடுத்து சப்வேயில் ஒரு ஓரமான இடத்தில் அமரவைக்கிறார். அதுவரை வெறுமனே பிச்சையெடுப்பவராக மட்டுமே இருந்த பாட்டியை சிறிது நேரத்தில் எடை மிஷின் கருவி வாங்கிக்கொடுத்து ஒரு சின்னஞ்சிறிய தொழில் செய்பவராக மாற்றினார் அந்த இளைஞர். தொடர்ந்து அந்த சப்வேயில் நடந்து செல்லும் பலரும் எடைபார்த்துவிட்டு 1 ரூபாய், 2 ரூபாய் என பாட்டியிடம் கொடுக்கின்றனர். பிச்சையெடுக்கும் போது கிடைத்த பணத்தை விட இப்போது கண் தெரியாத பாட்டி கூடுதலாக 20, 30 ரூபாய் இப்போது சம்பாதிக்கிறார்.

இளைஞரின் இந்த மாறுபட்ட சிந்தனை இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


நண்பர்களுடன் பகிர :