தந்தை பிரிவில் இருந்து மெல்ல மீளும் லாஸ்லியா... பல நாட்களுக்கு பின் புன்னகைத்து வெளியிட்ட புகைப்படம்... குஷியில் ரசிகர்கள்..! Description: தந்தை பிரிவில் இருந்து மெல்ல மீளும் லாஸ்லியா... பல நாட்களுக்கு பின் புன்னகைத்து வெளியிட்ட புகைப்படம்... குஷியில் ரசிகர்கள்..!

தந்தை பிரிவில் இருந்து மெல்ல மீளும் லாஸ்லியா... பல நாட்களுக்கு பின் புன்னகைத்து வெளியிட்ட புகைப்படம்... குஷியில் ரசிகர்கள்..!


தந்தை பிரிவில் இருந்து மெல்ல மீளும் லாஸ்லியா... பல நாட்களுக்கு பின் புன்னகைத்து வெளியிட்ட புகைப்படம்... குஷியில் ரசிகர்கள்..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குகொண்டு உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் லாஸ்லியா. இவரது வெள்ளந்தியான குணம் ஆரம்பத்தில் நன்கு பேசப்பட்டது. நிகழ்ச்சியின் பின்பகுதியில் காதல் விவகாரத்தில் சிக்கி தன் பெயரை டேமேஜ்ம் செய்து கொண்டார் லாஸ்லியா.

ஆனாலும் லாஸ்லியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் படை இருக்கிறது. லாஸ்லியா பெயரில் ஆர்மியும் அமைத்தனர். லாஸ்லியா அண்மையில் நடிகர் ஆரியுடனும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் அந்த புகைப்படத்தின் மேல் போட்டோ கேப்சனாக நடிப்பில் களமிறங்கிவிட்டார் என்றும் முதல் படத்தின் பூஜை ஆரம்பமாகியுள்ளது எனவும் கூறப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து லாஸ்லியா நாயகியா நடிக்கிறார் என அவரது ரசிகர்கள் போஸ்டின் கீழ் ஹார்டீன்களை பறக்கவிட்டனர். இந்த படத்தில் ஆக்‌ஷன்கிங் அர்ஜூனும் நடிக்கிறார்.

இதேபோல் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்குடன் ‘ப்ரண்ட்ஷிப்’ என்னும் படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார் லாஸ்லியா. இதனால் லாஸ்லியா விரைவிலேயே வெள்ளித்திரையில் ரசிகர்கள் லாஸ்லியாவை ரசிக்கலாம்.

லாஸ்லியா எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.ஆனால் கடந்த சில தினங்களாக லாஸ்லியா சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இல்லை. காரணம், கனடாவில் லாஸ்லியாவின் தந்தை மாரடைப்பால் உயிர் இழந்தார். கொரோனா பிரச்னையால் ஒருமாதத்துக்குப் பின்பே லாஸ்லியாவின் தந்தையின் உடலைக் கொண்டுவந்தனர். இந்நிலையில் இதனால் சோகத்தில் இருந்த லாஸ்லியா, அதில் இருந்து மீண்டுவந்து நம்பிக்கை என நேற்று ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் லாஸ்லியா தன் தங்கை, நண்பர்களுடன் இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் லாஸ்லியா இந்தியாவுக்கு வந்துவிட்டாரா எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புகைப்படம் 1

புகைப்படம் 2


நண்பர்களுடன் பகிர :