தன் மகள் பேட்மிண்டன் விளையாடும் அழகை தனியாக நின்று பார்த்து ரசித்த விஜய்... இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..!

இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என சொல்லலாம். இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே ஏன் வீடே இல்லை என்றே சொல்லலாம்.

இளையதளபதி விஜய் இப்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.வரும் 13 ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகிறது. இளையதளபதி விஜய் தன் ரசிகை சங்கீதாவை திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் புது ஜோடி போலவே ரொமாண்டிக்காக வாழ்ந்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்னும் மகனும், திவ்யா ஷாஷா என மகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே தளபதியின் படங்களில் தலைகாட்டி இருக்கிறார்கள். இதில் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலிலும், திவ்யா ஷாஷா தெறி பட கிளைமேக்ஸ் காட்சியிலும் நடித்திருப்பார். அடிப்படையில் பேட்மிட்டன் வீராங்கணையான தளபதியின் மகள் திவ்யா ஷாஷா வெளிநாட்டில் படித்துவருகிறார்.

இந்நிலையில் திவ்யா ஷாஷா பேட்மிட்டன் விளையாடும் அழகை இளைய தளபதி விஜய் வேடிக்கைப் பார்க்கும் காட்சிகள் இணையத்தில் செம வைரலாக போய்க் கொண்டிருக்கிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே தளபதி அப்பாவா எப்படி பிள்ளையோட ஆட்டத்தை பார்க்குறாரு பாருங்க என கமெண்ட் செய்துவருகின்றனர்.
Thalaivaaaaa Semaaa Semaaaa Walk😘😘😘😘😘#ThalapathyVijay during his visit to badminton match of #DivyaSaasha😇@MersalRemo @Rohit55Ro @ramk8059 @sivast3 @sure9095 @Suresh_VijaySrt @MersalNithya114 @vj_in_thangai2 @VJKarthika19 @VijayRanjitha1 @sangeetha153111 @vjannafollower pic.twitter.com/kWtAHv5tFa
— 💝 Joseph 💝💝 Nandhini Vj 💝 (@AmmuSiva0929) March 3, 2018