டீவி பார்த்து உற்சாகமாக நடனமாடிய குழந்தை.. கடைசியில் நடந்த பாருங்க.. விழுந்து விழுந்து சிரிப்பீங்க..! Description: டீவி பார்த்து உற்சாகமாக நடனமாடிய குழந்தை.. கடைசியில் நடந்த பாருங்க.. விழுந்து விழுந்து சிரிப்பீங்க..!

டீவி பார்த்து உற்சாகமாக நடனமாடிய குழந்தை.. கடைசியில் நடந்த பாருங்க.. விழுந்து விழுந்து சிரிப்பீங்க..!


டீவி பார்த்து உற்சாகமாக நடனமாடிய குழந்தை.. கடைசியில் நடந்த பாருங்க.. விழுந்து விழுந்து சிரிப்பீங்க..!

குழந்தைகள் உலகம் எப்போதும் குதூகலமானது. அவர்கள் எதை செய்தாலும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். அதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகள் செய்யும் சின்ன, சின்ன குறும்புகளையும் கூட வீடியோவாக எடுத்து நினைவுகளை பத்திரப்படுத்தி கொள்கின்றனர்.

குழந்தைகளின் குறும்பினை ரசிக்க இரு கண்கள் போதாது என்றே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அவர்கள் செய்யும் சேட்டைகள் ரசிக்க வைக்கும். சிலநேரங்களில் அந்த குறும்புகளே பெரும் தொந்தரவாகவும் மாறிவிடும். இங்கேயும் அப்படிதான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

டிவியில் வந்த பாட்டைப் பார்த்து குட்டி தேவதை ஒன்று அழகாக ஆடிக் கொண்டு இருந்தது. குழந்தையின் தந்தை தன் செல்லமகள் அழகாக ஆடுவதை பார்த்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். செல்போனில் அந்த காட்சியை தந்தை பதிவுசெய்ய அந்த காட்சிக்கு ஏற்ப டிவியை பார்த்து குழந்தை ஆடிக் கொண்டு இருந்தது. டிவி பெட்டியில் ஒரு பேருந்தில் நடனமாடிய குழந்தை தலைக்கு மேல் இருந்த கம்பியை பிடித்து குதித்து ஆட உற்சாக மிகுதியில் இந்தக் குழந்தை தன் வீட்டு டிவியை பிடித்து தொங்கி ஆடியது. நொடிப்பொழுதில் அந்த டிவி கீழே விழுந்து உடைந்தது. இதுவும் அந்த செல்போனிலேயே பதிவானது. குறித்த இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :