முதன் முதலாக சலூன் கடைக்குச் சென்ற குழந்தை.. முடிவெட்டும் போது கொடுத்த ரியாக்சனை பாருங்க...! Description: முதன் முதலாக சலூன் கடைக்குச் சென்ற குழந்தை.. முடிவெட்டும் போது கொடுத்த ரியாக்சனை பாருங்க...!

முதன் முதலாக சலூன் கடைக்குச் சென்ற குழந்தை.. முடிவெட்டும் போது கொடுத்த ரியாக்சனை பாருங்க...!


முதன் முதலாக சலூன் கடைக்குச் சென்ற குழந்தை.. முடிவெட்டும் போது கொடுத்த ரியாக்சனை பாருங்க...!

‘’ஆளானப்பட்ட அரசன் கூட குனியனும்...இங்க வந்தா குனியனும்...முடி வளர, வளர வண்ணம் செய்ய குனியனும்’’ என தமிழ் திரைப்படத்தில் ஒரு பாடல் வரும். அதேபோல குனிந்த தலை நிமிராமல் முடிவெட்ட வேண்டும். ‘’இருக்குறவன் ஒழுங்கா இருந்தா முடிவெட்டுறவன் ஒழுங்கா வெட்டுவான்’’ன்னும் ஒரு பழமொழி உண்டு.

முடிவெட்டுக் கடைக்கு செல்லாத ஆண்கள் இந்த உலகத்திலேயே இல்லை. பெண்களும் அழகுநிலையம் போய் அவ்வப்போது முடிவெட்டிக் கொள்வது வழக்கம். ஆனால் நம்முடைய குழந்தைப் பருவத்தை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். சலூன் கடை, அந்த கத்தி, சுழலும் சேர் அத்தனையும் பார்த்து பயந்துவிடுவோம். அதிலும் சலூன் கடைக்காரர் தலையில் கத்தி வைக்கும் நிமிடம் கேட்கவே வேண்டாம். பயத்தில் கண்ணீராய் வந்துவிடும். குழந்தைப்பருவத்தில் முடிவெட்ட பயந்த நாள்கள் இப்போதும் நெஞ்சில் நிழலாடுகிறது.

ஆனால் இங்கே ஒரு பொடியன் அதை மிக அசால்டாக டீல் செய்கிறார். முதன் முறையாக சலூன் கடைக்குப் போன அந்த குழந்தை தலையில் ட்ரிம்மரை வைத்ததுமே கூச்சத்தில் குலுங்கி, குலுங்கி சிரிக்கிறது. ஒருகட்டத்தில் முடி திருத்தும் பெண், குழந்தையை மடியில் வைத்திருக்கும் தாய் என அனைவருமே அதற்கு ரசிகர்களாகி போகின்றனர். நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள். குலுங்கி, குலுங்கி சிரிப்பீர்கள்.


நண்பர்களுடன் பகிர :