பல்லி, கிளி, காகம், ஆந்தை,கழுகு, பாம்பு அடிக்கடி பார்த்தால் என்ன அர்த்தம் தெரியுமா? Description: பல்லி, கிளி, காகம், ஆந்தை,கழுகு, பாம்பு அடிக்கடி பார்த்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

பல்லி, கிளி, காகம், ஆந்தை,கழுகு, பாம்பு அடிக்கடி பார்த்தால் என்ன அர்த்தம் தெரியுமா?


பல்லி, கிளி, காகம், ஆந்தை,கழுகு, பாம்பு அடிக்கடி பார்த்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

நாம் வாழும் பூமியில் மனிதர்கள் அதிகம். அதனால் நாம் வழியில் மனிதர்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது. அதேநேரம் வழியில் நாம் அடிக்கடி சில பிராணிகளை எதிர்கொள்வோம். அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கிளி

கிராமப்பகுதிகளில் இப்போதும் அடிக்கடி கிளியைப் பார்க்க முடியும். பனை மரங்கள் சூழ்ந்த பகுதியில் அதிகக் கிளி இருக்கும். அதேநேரம் கிராமமோ, நகரமோ நீங்கள் எங்கே இருந்தாலும் அடிக்கடி உங்கள் பார்வையில் கிளி தென்பட்டால் அது மிகவும் நல்ல சகுனம். எந்த சூழலிலும் யாரோ ஒருவர் உதவிக்கரம் நீட்டுவார் என்பதன் அறிகுறி இது.

கழுகு..

கழுகை அடிக்கடி சந்தித்தால் வரும் நாள்களில் நீங்கள் வாழ்க்கைக்கான முக்கியப் பாடத்தைக் கற்றுக்கொள்ளப் போகீறீர்கள் என்று அர்த்தம்.

பச்சோந்தி

தொடர் தோல்வி சிலரைப் பாடாய் படுத்தும். அப்படியான சமயத்தில் வழியில் பச்சோத்தியைப் பார்த்தால் மனம் தளராமல் அதேபோல் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். வெற்றி கிடைக்கும் என்பது அறிகுறி.

பாம்பு..

சக்தி, ஞானத்தின் அடையாளமாக இது பார்க்கப்படுகிறது. பாம்பை அடிக்கடி பார்த்தால் நமக்குள் இருக்கும் நம் ஆற்றலை உணர்த்துவதாகப் பார்க்கப்படுகிறது. பாம்பை சந்தித்தால் நாம் வெற்றியை நோக்கி செல்வதாக அர்த்தம்.

காகம்..

மூதாதையர்களாக தான் காகத்தை பார்க்கிறோம். அதனால் தினமும் காகத்துக்கு உணவு வைக்கும் பழக்கம் இருக்கிறது. காகத்தை அடிக்கடி பார்த்தால் ஏதோ ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ளப் போவதாக அர்த்தம்.

சிலந்தி பூச்சி..

பார்க்க அருவருப்பாக இருந்தாலும் சிலந்தி புனிதமானதாக கருதப்படுகிறது. சிலந்தி அடிக்கடி உங்கள் வீட்டில் வந்து கூடு கட்டுவதும், நீங்கள் சிலந்தியை அடிக்கடி பார்ப்பதும் அது உங்களை நோக்கி உங்களுக்கு தேவையான செய்திகள் வருவதைக் குறிக்கும்.

பல்லி

நாம் செல்லும் வழியில் பல்லி வந்தால் போகும் வேலை வெற்றிகரமாக முடியும் என அர்த்தம். அதன் மூலம் வெற்றியும், நல்ல செய்தியும் தேடிவரும்.

ஆந்தை..

அந்தை அடிக்கடி கண்ணில் பட்டால் நீங்கள் சில குழப்பமான சூழ்நிலைகளில் விழப்போவதைக் குறிக்கும். இது போன்ற சூழலில் எடுப்பார் கைப்பிள்ளையாக இல்லாமல் சொந்த மூளையை பயன்படுத்த வேண்டும்.


நண்பர்களுடன் பகிர :