நிவர் புயலில் இருந்து தப்பிக்க விவசாயி செய்த தரமான சம்பவம்.. தமிழன்னா சும்மாவா? வைரலாகும் காட்சிகள்..! Description: நிவர் புயலில் இருந்து தப்பிக்க விவசாயி செய்த தரமான சம்பவம்.. தமிழன்னா சும்மாவா? வைரலாகும் காட்சிகள்..!

நிவர் புயலில் இருந்து தப்பிக்க விவசாயி செய்த தரமான சம்பவம்.. தமிழன்னா சும்மாவா? வைரலாகும் காட்சிகள்..!


நிவர் புயலில் இருந்து தப்பிக்க விவசாயி செய்த தரமான சம்பவம்.. தமிழன்னா சும்மாவா? வைரலாகும் காட்சிகள்..!

நிவர் புயல் நேற்று கரையைக் கடந்தது. இதற்கு தமிழக அரசு மிகச்சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்தது. இதனால் நிவர் புயல் பெரிய அளவில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிவர் புயலில் இருந்து தன் உடமைகளைப் பாதுகாக்க விவசாயி ஒருவர் முன்னெச்சரிக்கையாக செய்த சம்பவம் செம வைரல் ஆகிவருகிறது.

நிவர் புயல் கரையைக் கடக்கும்போது புதுக்கோட்டை உள்பட ஏழுமாவட்டங்களில் புயல் காற்று வீடும், கனமழை பொழியும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விட்டிருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள நகரம் கிராமத்தை சேர்ந்த குமார் என்னும் விவசாயி, புயலால் வீட்டு மேற்கூரைகள் பறந்துவிடக் கூடாது என்பதற்காக அவரே வீட்டு ஓடுகளை எடுத்து கீழே வைத்துள்ளார். கஜா புயல் ஏற்கனவே புதுக்கோட்டையை புரட்டி எடுத்தது. இந்நிலையில் அதேபோல் இந்த நிவர் புயலும் பாதிப்பைத் தரக்கூடாது என்பதால் விவசாயி குமார் இப்படி முன்னெச்சரிக்கையாக செயல்பட்டுள்ளார்.

இதேபோல் சில விவசாயிகள் மரங்களில் அடர்த்தியாக வளர்ந்திருந்த கிளைகளை தானே வெட்டியும் முன்னெச்சரிக்கையாக பெரும் ஆபத்து வராமல் நிவரில் இருந்து தப்பினர்.


நண்பர்களுடன் பகிர :