எழுமிச்சையோடு உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால் இவ்வளவு நன்மைகளா? Description: எழுமிச்சையோடு உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

எழுமிச்சையோடு உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?


எழுமிச்சையோடு உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

இன்று மக்கள் சின்ன, சின்ன நோய் என்றாலே அலோபதி மருத்துவத்தைத் தேடி ஓடுகின்றனர். ஆனால் அது அவசியம் அற்றது. நம் வீட்டிலேயே இருக்கும் சமையலறையிலே நம் ஆரோக்கியத்துக்கான ரகசியம் அமைந்துள்ளது. அந்த வகையில் சில விசயங்களை மட்டும் கடைபிடித்தாலே நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

இதுதொடர்பாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். எலுமிச்சை, மிளகு, உப்பு இது மூன்றையும் சேர்த்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

மூக்கடைப்பு போக...

சிலருக்கு அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இதற்கு அவர்களுக்கு சரியாக தும்மல் வராததுதான் காரணம். இயற்கையான முறையில் தும்மல் வருவதற்கு இலவங்கப்பட்டை, மிளகு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நன்கு அரைத்து பொடியாக்க வேண்டும். இதனை மூக்கடைப்பு வரும்போது சுவாசித்தாலே போய்விடும்.

மூக்கில் ரத்தம் வடிதல் போக..

சிலநேரங்களில் இரத்த அழுத்தம் மித மிஞ்சிக் கூடினாலும் மூக்கில் ரத்தம் வடியும். அப்படி இருப்பவர்கள் உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது. இன்னொருபுறத்தில் சிலருக்கு அலர்ஜியாகவும் மூக்கில் ரத்தம் வடியும். இவர்கள் சிறிய பஞ்சை, எழுமிச்சை சாறில் முக்கி, ரத்தம் வரும் இடத்தில் வைத்தால் ரத்தக்கசிவு நிற்கும். ரத்தம் வருவது நிற்கும் வரை தலையையும் சாய்த்து வைத்திருக்க வேண்டும்.

பல்வலி போக சூப்பர் டிப்ஸ்..

பல்வலி வந்தால் பாடாய் படுத்தி எடுத்துவிடும். பல்வலி வந்தால் அரை ஸ்பூன் கிராம்பு எண்ணெய், அரை ஸ்பூன் மிளகுத்தூள் இரண்டையும் சேர்த்து வலி இருக்கும் பல்லின் மீது பூச பல்வலி போய்விடும்.

ஆஸ்துமாவுக்கு அருமருந்து...

சூடாகக் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் இரண்டு கிராம்பு, பத்துமிளகு மற்றும் சில துளசி தழைகளை போட்டு 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும். இதை ப்ரிட்ஜில் வைத்தால் இருவாரங்களுக்கு கெடாது. ஆஸ்துமாவுக்கு இது ஒரு அருமருந்து ஆகும்.

வாந்தி..குமட்டல்..

ஒரு ஸ்பூன் எழுமிச்சைச் சாறு, ஒரு ஸ்பூன் மிளகு இரண்டையும் ஒரு டம்ளர் சூடான நீரில் சேர்த்து, கொஞ்சம் உப்பு போட்டு குடித்தால் வாந்தி, குமட்டல் என வயிறு தொடர்பான சகல நோய்களும் போகும்.

இதேபோல் எழுமிச்சை சாறில் மிளகுதூள், தேன் சேர்த்து அதோடு சூடான தண்ணீரையும் கலந்து தினமும் காலை உணவுக்கு முன்பு குடித்துவந்தால் உடல் எடையும் கணிசமாகக் குறையும்.


நண்பர்களுடன் பகிர :