வானில் இருந்து விழுந்த கல்... கூரையை பிய்த்துக்கொண்டு வந்த அதிர்ஷ்டம்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான சாமானியர்..! Description: வானில் இருந்து விழுந்த கல்... கூரையை பிய்த்துக்கொண்டு வந்த அதிர்ஷ்டம்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான சாமானியர்..!

வானில் இருந்து விழுந்த கல்... கூரையை பிய்த்துக்கொண்டு வந்த அதிர்ஷ்டம்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான சாமானியர்..!


வானில் இருந்து விழுந்த கல்... கூரையை பிய்த்துக்கொண்டு வந்த அதிர்ஷ்டம்..  ஒரே நாளில் கோடீஸ்வரரான சாமானியர்..!

கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என நம்மூரில் வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்வார்கள். அதை உண்மை என சொல்லும் அளவுக்கு ஒரு சம்பவம் இந்தோனேஷியா நாட்டில் நடந்துள்ளது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்தோனேஷியா நாட்டின் வடக்கு சுமத்ராவில் கொலாங் பகுதியில் josua hutagalung என்ற 33 வயது வாலிபர் தன் குடும்பத்தோடு வசித்து வந்தார். இவர் இறந்தவர்களை அடக்கம் செய்யும் சவப்பெட்டி தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டின் கூரைப்பகுதியில் இருந்து சமீபத்தில் ஏதோ ஒரு பொருள் உடைந்து விழுந்ததாக உணர்ந்தவர், அதை எடுக்க முயன்றார். அது ரொம்பவும் சூடாக இருக்கவே, அவருக்கு அது விண்கல் எனத் தெரியவந்தது.

அது பல மில்லியன் மதிப்பு உள்ளது என்பதும் அவருக்குத் தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அங்குள்ள ஊடகங்களிடம் பேசுகையில், ‘’வீடுகள் சில குலுங்கும் அளவுக்கு பெரிய சத்தம் வந்தது. நான் வீட்டை சுற்றிப் தேடிய போது, என் வீட்டின் தகரம் உடைந்து இருந்தது. கூடவே அதற்கு நேராக ஒரு குழி உருவாகியிருந்தது. உடனே அதில் மண்வெட்டி வைத்து தோண்டிய போதுதான் இந்தக்கல் கிடைத்தது.

அக்கம், பக்கத்தினர் இதை விண்கல் எனச் சொன்னாலும், நான் கூட உள்ளூர்வாசிகள் யாரேனும் கோபத்தில் என் வீட்டில் இந்த கல்லை வீசினார்களோ என்றுதான் நினைத்தேன். அதன் பின்னரே இது 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல் என்பதும், தெரிய வந்துள்ளது.

இந்த கல்லை இவரிடம் இருந்து அமெரிக்க விண்கல் நிபுணர் கொலின்ஸ் 1.4 மில்லியன் பவுண்ட் கொடுத்து வாங்கி அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளார். அங்கு பிரபல விண்கல் சேகரிப்பாளர் ஜெய் பியடெக் இதை வாங்கியுள்ளார். அரிதான இந்த விண்கல் சி.எம் 1/2 கார்பனேசிய சோண்ட்ரைட் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸில் இருக்கும் சந்திர மற்றும் கிரக நிறுவனம் இந்தக்கல் இரண்டரை கிலோ எடையுள்ளது என அறிவித்துள்ளது.

கொடுக்குற தெய்வம் கூரையை பிய்ச்சுகிட்டு கொடுக்கும் என்பது இந்த இந்தோனேஷியா வாலிபர் விஷயத்தில் நிஜமாகியுள்ளது.


நண்பர்களுடன் பகிர :