பழைய புத்தகம் கேட்டுவந்த மாணவி.. காரணம் கேட்டு பல்ப் வாங்கிய வாலிபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ...! Description: பழைய புத்தகம் கேட்டுவந்த மாணவி.. காரணம் கேட்டு பல்ப் வாங்கிய வாலிபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

பழைய புத்தகம் கேட்டுவந்த மாணவி.. காரணம் கேட்டு பல்ப் வாங்கிய வாலிபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ...!


பழைய புத்தகம் கேட்டுவந்த மாணவி.. காரணம் கேட்டு பல்ப் வாங்கிய வாலிபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களில் இலவசமாகவே புத்தகங்கள் கொடுக்கிறார்கள். அரசுப்பள்ளிகள் துவங்கியதுமே இலவச புத்தகங்கள், சீறுடை, காலணி, லேப்டாப் என இலவசங்கள் அணிவகுக்கிறது. 90ஸ் கிட்ஸ்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை. புத்தகமெல்லாம் பள்ளிக் கூடத்தில் கிடைக்காது.

முந்தைய ஆண்டு படித்த சீனியரைத் தேடிப்பிடித்து புத்தகம் வாங்கிப் படிப்பது வழக்கம். இங்கேயும் அப்படித்தான் தன் பக்கத்து வீட்டு அண்ணனிடம் புத்தகம் கேட்டு வந்தாள் ஒரு மாணவி..

அண்ணே, உங்க பழைய பிசிக்ஸ் புக் வேண்டும் எனக்கேட்க, என்னிடம் இருக்கும்ன்னு யாரும்மா சொன்னா? என அந்த வாலிபர் கேட்கிறார்.

உடனே அதற்கு அந்த மாணவி, எங்க அம்மா தான் சொன்னாங்க. கூடவே, படிக்குறவன் தான் புக்கை கிழிச்சு வைச்சுருப்பான். இவன் படிக்காத கூமுட்டைதான். இவன்கிட்ட போய் கேளுன்னு சொன்னாங்கண்ணே..எனச்சொல்ல, ஆமா, உங்க அப்பா ஒன்னும் சொல்லலியா? என பதிலுக்கு அந்த வாலிபர் கேட்கிறார்.

உடனே அந்த பெண், ஆமா சொன்னாங்களே..இவன்கிட்ட புக் வாங்கிப்படிச்சா விளங்குன மாதிரிதான்னு சொன்னாங்க.’’எனச்சொல்ல செம பல்ப் வாங்கிய அந்த இளைஞர் புக்கை கொடுத்தாரோ இல்லியோ ஒரு ரியாக்சன் கொடுத்தாரு பாருங்க...இதோ முப்பதே நொடியில் உங்களை சிரிக்க வைக்கும் அந்த வீடியோ இதோ..


நண்பர்களுடன் பகிர :