அடிக்க வந்த அம்மாவிடம் இருந்து தம்பிக்கு அரணாக நின்ற குட்டிதேவதை... நெஞ்சை உருகவைக்கும் ஒரு பாச வீடியோ...! Description: அடிக்க வந்த அம்மாவிடம் இருந்து தம்பிக்கு அரணாக நின்ற குட்டிதேவதை... நெஞ்சை உருகவைக்கும் ஒரு பாச வீடியோ...!

அடிக்க வந்த அம்மாவிடம் இருந்து தம்பிக்கு அரணாக நின்ற குட்டிதேவதை... நெஞ்சை உருகவைக்கும் ஒரு பாச வீடியோ...!


அடிக்க வந்த அம்மாவிடம் இருந்து தம்பிக்கு அரணாக நின்ற குட்டிதேவதை... நெஞ்சை உருகவைக்கும் ஒரு பாச வீடியோ...!

உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’. அதில் அக்கா, தம்பி பாசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

தன் தாய் வயிற்றில் கருவை சுமக்கும் போதே, முதல் குழந்தையாக இருக்கும் பெண் குழந்தை தம்பியின் வரவுக்கு துள்ளித் துடிப்பாள். பல இல்லங்களில் தம்பி பாப்பாக்களுக்கு இரண்டாவது தாயாகவே மாறி இருப்பாள் அக்கா. பள்ளிக் கூடத்துக்கு கையை பிடித்து அழைத்துச் செல்வது, காலையில் குளிப்பாட்டி, டிரஸ் செய்து விடுவது என தம்பிகளின் அழகிய பொழுதுகளில் அக்காக்களின் கைவண்ணமும் இருக்கும். அதனால் தான் மணம் முடிந்த பின்னர் தன் கணவர் இல்லத்துக்கு செல்லும் அக்காக்களை பிரிய முடியாமல் ஓவென்று அழுகின்றனர் தம்பிகள்.

இங்கும் அப்படித்தான். தம்பி ஏதோ சிறிய தவறு செய்துவிட்டான். இதனால் கோபத்தில் அவனது அம்மா அடிக்க வருகிறார். உடனே அவனது அக்கா, தம்பிக்கு அரணாக நின்று தன் அம்மா அடிக்கும் அடி தம்பியின் மீது பட்டுவிடாதவாறு காப்பாற்றி நிற்கிறாள். குறித்த அந்தக் காட்சியைப் பார்க்கவே மிகவும் உணர்வுபூர்வமாகவும், அக்கா_தம்பி உறவின் மேன்மையை சொல்லும்படியும் இருக்கிறது. இதோ நீங்களே வீடியோவைப் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :