கடவுளை வணங்கி வயலில் நாற்று நட்ட குட்டி தேவதை... மில்லியன் பேர் ரசித்த காட்சி..! Description: கடவுளை வணங்கி வயலில் நாற்று நட்ட குட்டி தேவதை... மில்லியன் பேர் ரசித்த காட்சி..!

கடவுளை வணங்கி வயலில் நாற்று நட்ட குட்டி தேவதை... மில்லியன் பேர் ரசித்த காட்சி..!


கடவுளை வணங்கி வயலில் நாற்று நட்ட குட்டி தேவதை... மில்லியன் பேர் ரசித்த காட்சி..!

கொரோனா காலம் அனைவருக்கும் தற்சார்பு வாழ்க்கைக் குறித்து உணர்த்தியிருக்கிறது. பலரும் இப்போது செடி, கொடி, மரம் என வளர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். அதேநேரத்தில் இன்னும் கூட விவசாயிகளுக்கு உரிய மரியாதையை நாம் செய்துவிடவில்லை.

விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும் என்னும் வாசகம் ரொம்பப் பிரபலம். ஆனால் அந்த நன்றி விஸ்வாசம் என்றுமே சராசரி மனிதர்களாகிய நம்மிடம் இருந்தது இல்லை. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது மட்டும் நாம் விவசாயிகளுக்கும், விவசாய உற்பத்திக்கும் நன்றி சொல்கிறோம். ஆனால் இந்தியாவின் முதுகெழும்பே விவசாயம் தான். ஆனால் இங்கு இன்னும் பொருளாதார ரீதியில் விவசாயிகள் கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

இன்றைய தலைமுறையினர் ஒயிட்காலர் வேலையைத்தான் பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களுக்கு விவசாயம் செய்வது ஏதோ குறைச்சலான தொழில்போல் இருக்கிறது. இவ்வளவு ஏன், இன்று விவசாயிகளாக இருப்பவர்களே தங்கள் பிள்ளைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்புவதில்லை. இப்படியான சூழலுக்கு மத்தியில் இங்கே நாற்று நடும் பாட்டி ஒருவர், தன் பேத்தியை வயலுக்கு அழைத்து வந்து அவருக்கு நாற்று நடுவது பற்றிக் கற்றுத் தருகிறார். கூடவே நாற்றை தெய்வமாக மதித்து நாற்று நட்ட பின்னர் அதைத் தொட்டுக் கும்பிடவும் அந்த குட்டிதேவதைக்கு சொல்லிக்கொடுக்க அதுவும் அப்படியே செய்கிறது. குறித்த இந்த வீடியோ இணையத்தில் பத்துலட்சம் பேரின் மனதைக் கவர்ந்திருக்கிறது. இதோ நீங்களும் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :