90 வயது பாட்டிக்கு இப்படியொரு ஆசையா? நிறைவேற்றிய மகன்... பாட்டி செய்த தரமான சம்பவம்.. Description: 90 வயது பாட்டிக்கு இப்படியொரு ஆசையா? நிறைவேற்றிய மகன்... பாட்டி செய்த தரமான சம்பவம்..

90 வயது பாட்டிக்கு இப்படியொரு ஆசையா? நிறைவேற்றிய மகன்... பாட்டி செய்த தரமான சம்பவம்..


90 வயது பாட்டிக்கு இப்படியொரு ஆசையா?  நிறைவேற்றிய மகன்... பாட்டி செய்த தரமான சம்பவம்..

சாதிப்பதற்கும், வாழ்வை அனுபவித்து வாழ்வதற்கும் வயது நிச்சயமாக தடையாக இருக்க முடியாது. புதிய, புதிய விசயங்களைக் கற்றுக்கொள்ளும் தேடலும், அது குறித்த ஆர்வமும் இருந்தாலே போதும். அதை மெய்பிக்கும் வகையில் கேரளத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாகவே வீட்டில் பெரியவர்கள் இருப்பது நமக்கு நல்ல ஆலோசகர் இருப்பதற்குச் சமம். அதனால் தான் வீட்டில் முதியோர்கள் இருப்பது வரம் என சொல்கிறோம். ஆனால் இன்றைய கால ஓட்டத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை பாரமாக நினைக்கும் சூழலுக்குள் வந்துவிட்டார்கள். இப்படியான சூழலுக்கு மத்தியில் தன்னை பெற்றெடுத்த அன்னையின் மீது பேரன்பு செலுத்தும் ஒரு மகன் செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

குறித்த அந்தக் காட்சியில் ஒரு மகனிடம் 90 வயது நிரம்பிய தாய் தனக்கு சைக்கிள் ஓட்டிப்படிக்க வேண்டும் என ஆர்வமாக இருப்பதாக ஆசையைச் சொல்லியிருக்கிறார். உடனே மகனும், தனது மகளின் சைக்கிளை எடுத்து தன் அம்மாவுக்கு கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். 90 வயதான பாட்டி கொஞ்சமும் மனம் தளராமல் அழகாக சைக்கிளை ஓட்டிச் செல்கிறார். இப்போது இந்தப்பாட்டி அழகாக சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார். அவரே இப்போது சைக்கிளில் ஊருக்குள் குட்டி ரவுண்ட்ஸ் அடிக்கத் தொடங்கியிருக்கிறாராம். கற்றுக்கொள்ளவும், சாதிக்கவும் வயது தடையே அல்ல என இந்தக்காட்சிகளை இணையவாசிகள் ஷேர் செய்துவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :