வழக்கம்போல் கணவரைப் பிரிந்த வனிதா விஜயகுமார்.. கிழித்து தொங்கவிட்ட நடிகை கஸ்தூரி..! Description: வழக்கம்போல் கணவரைப் பிரிந்த வனிதா விஜயகுமார்.. கிழித்து தொங்கவிட்ட நடிகை கஸ்தூரி..!

வழக்கம்போல் கணவரைப் பிரிந்த வனிதா விஜயகுமார்.. கிழித்து தொங்கவிட்ட நடிகை கஸ்தூரி..!


வழக்கம்போல் கணவரைப் பிரிந்த வனிதா விஜயகுமார்.. கிழித்து தொங்கவிட்ட நடிகை கஸ்தூரி..!

பிக்பாஸ் வீட்டு மூலம் ரீ எண்ட்ரி ஆன வனிதா விஜயகுமார் தனது கணவர் பீட்டர் பாலை பிரிந்துவிட்டார். இதுதொடர்பாக அவரே அவரது யூடியூப் சேனலிலிலும் விளக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வனிதாவை பிரபல நடிகை கஸ்தூரி கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

விஜயகுமாரின் மகள் வனிதா, சந்திரலேகா படத்தில் இளையதளபதி விஜய்க்கே ஜோடியாக நடித்திருந்தார். அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் காட்டிய வில்லத்தனத்தில் தமிழகமே கடுப்பானது. அந்த அதிருப்தி அடங்குவதற்குள் பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். பீட்டர்பாலுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இதனிடையே பீட்டர் பாலின் முதல்மனைவி எலிசபெத்தின் பஞ்சாயத்தும் ஓடியது. இவைகளுக்கு மத்தியில் பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி வந்து சிகிட்சை பெற்று திரும்பியது தனிக்கதை.

அதன் பின் தன் கணவர் பீட்டர்பாலையும் அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் கோவாவுக்கு இன்பசுற்றுலா போனார் வனிதா. ஆனால் கோவாவில் இருந்து வந்ததுமே இருவரும் பிரிந்துவிட்டனர். பீட்டர் பால் சிகரெட் பிடிப்பது, திடீரென தொற்றிக் கொண்ட குடிபழக்கம், பொய் சொல்வது, நெஞ்சுவலி வந்தபின்னும் புகை பிடித்தது என புகாரை அடுக்கினார் வனிதா. இதுதொடர்பாக அவரது யுடியூப் சேனலில் 50 நிமிடங்களுக்கு வீடியோவும் வெளியிட்டார் வனிதா.

அது வைரலான நிலையில் அது தொடர்பாக நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘’உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிரைவேட்டாக இருக்கவேண்டும் என்றால் அதைப்பற்றி சோசியல் மீடியாவில் பேசாதீர்கள். டெய்லி அப்டேட் கொடுப்பதும், அறிக்கைவிடுவதும் ஏன்? வனிதாவை யாரும் மீடியா சர்கஸ் ஆக்கவில்லை. அவர்தான் அப்படி ஒரு சர்க்கஸை உருவாக்கினார். அவரின் சர்கஸ், அவரின் குரங்குகள். தான் ஒரு ரிங் மாச்டர் என நினைத்தார். ஆனால் ஜோக்க ஆகிட்டார்.’’என கொதித்து உள்ளார்.


நண்பர்களுடன் பகிர :