சாமி கும்பிடும்போது கவனிக்கவேண்டிய விசயங்கள் பற்றி தெரியுமா? இதையெல்லாம் பாளோ செய்தால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்...! Description: சாமி கும்பிடும்போது கவனிக்கவேண்டிய விசயங்கள் பற்றி தெரியுமா? இதையெல்லாம் பாளோ செய்தால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்...!

சாமி கும்பிடும்போது கவனிக்கவேண்டிய விசயங்கள் பற்றி தெரியுமா? இதையெல்லாம் பாளோ செய்தால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்...!


சாமி கும்பிடும்போது கவனிக்கவேண்டிய விசயங்கள் பற்றி தெரியுமா? இதையெல்லாம் பாளோ செய்தால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்...!

சாமி கும்பிடுவது மிகவும் நல்ல ஒரு விசயம். தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியின் மீதான பயம், பேரன்பு, விஸ்வாசம் ஆகியவை நமக்குள் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். ஆன்மீக ரீதியாக பலரும் தினமும் கோயிலுக்குப் போய் வழிபாடு செய்வார்கள். சிலரோ தங்கள் வீட்டு பூஜையறையில் தினமும் சாமி கும்பிடுவார்கள்.

பசுவின் எல்லா இடத்திலும் பால் இருக்கிறது. அதேநேரம் மடியை தானே பாலுக்காக கறக்கிறோம். அதேபோல் கடவுள் எங்கும் நீக்கமற இருந்தாலும் ஆலயத்தில் போய் வழிபடுவது உத்தமம் என கிருபானந்த வாரியார் சொல்வார். நீங்கள் தினமும் சாமி கும்பிடுபவர்களாக இருந்தால் இந்த பின்வரும் விசயங்களை மட்டும் பாளோ செய்தால் வாழ்க்கை செமயாக இருக்கும். அது என்ன எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அமாவாசையன்று பசித்தோருக்கு உணவிட வேண்டும். அமாவாசை அன்று விரதம் மேற்கொள்பவர்கள் வீட்டில்தான் சாப்பிட வேண்டும். ஹோட்டலிலோ, வெளியில் சமைத்ததையோ சாப்பிடக்கூடாது.பூஜைக்கு பயன்படுத்திய தேங்காயை சமையல் பயன்படுத்தலாம். தப்பில்லை. ஆனால் அதே உணவை மீண்டும் சாமிக்கு நிவேத்யம் செய்யக் கூடாது. பெண்கள் வேல், சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யக் கூடாது. கோயிலில் சூடத்தையும், தீபத்தையும் கைகளில் ஏற்றிக் காட்டக்கூடாது.

ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு வகையான இலையால் அர்ச்சனை செய்யவேண்டும். சிவனுக்கு வில்வ இலையிலும், விஷ்ணுவுக்கு துளசியிலும், விநாயகருக்கு அருகம்புல்லிலும் அர்ச்சனை செய்யவேண்டும். பிரம்மாவுக்கு அத்தி இலை உகந்தது. இந்த, இந்த தெய்வங்களுக்கு இந்த இலையில் தான் பூஜை செய்யவேண்டும். அதேபோல் விளக்கு எரிந்து கொண்டு இருக்கும்போது அதில் இருக்கும் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொட்டுவிட்டு தலையில் தேய்க்கக் கூடாது.

கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவது ரொம்ப நல்லது. அதே நேரம் வீட்டில் விளக்கு ஏற்றி, வாசலில் கோலம் இடாமல் கோயிலுக்குச் செல்வது எந்தப் பலனும் தராது. இதேபோல் சூடம் ஏற்றி சாமிக்கு காட்டும்போது, பகவானின் காலுக்கு நான்கு முறையும், தொப்புளுக்கு இருமுறையும், முகத்துக்கு ஒரு தடவையும், முழு உருவத்துக்கு மூன்றுமுறையும் காண்பித்து வழிபடவேண்டும். இதேபோல் பயணநேரத்திலும் காயத்ரி மந்திரத்தை சொல்லக்கூடாது. காய்த்ரி மந்திரத்தை சுத்தமான இடத்தில் தான் சொல்லவேண்டும். இதையெல்லாம் பாளோ செய்யுங்கள்.


நண்பர்களுடன் பகிர :