சாக்கடைக்குள் குடும்பம் நடத்தி வாழும் ஆச்சர்ய தம்பதி... காரணம் என்ன தெரியுமா...? Description: சாக்கடைக்குள் குடும்பம் நடத்தி வாழும் ஆச்சர்ய தம்பதி... காரணம் என்ன தெரியுமா...?

சாக்கடைக்குள் குடும்பம் நடத்தி வாழும் ஆச்சர்ய தம்பதி... காரணம் என்ன தெரியுமா...?


 சாக்கடைக்குள் குடும்பம் நடத்தி வாழும் ஆச்சர்ய தம்பதி... காரணம் என்ன தெரியுமா...?

ஆசை, ஆசையாக வீடு கட்டி நல்ல இடம் பார்த்து குடிபெயர்வது எல்லாருக்கும் பிடித்த விசயம் தான். ஆனால் ஒரு தம்பதியினர் ஆசை, ஆசையாக சாக்கடைக்குள் குடியிருந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இன்று..நேற்று அல்ல. அந்தத் தம்பதிகள் கடந்த 22 வருடங்களாக இப்படித்தான் வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். கொலம்பியாவைச் சேர்ந்த மரியா கார்சியாவும் அவரது கணவர் மிகுவல் ரெஸ்ட்ரேபோவும் தான் 22 வருடங்களாக சாக்கடைக்குள் குடித்தனம் நடத்துகின்றனர். போதைக்கு அடிமையாக இருந்த இவர்கள் இருவரும் போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யும் மேடெல்ளின் பகுதியில் தான் முதல் முதலில் சந்திக்கவும் செய்தனர்.

போதைக்கு அடிமையான இவர்களை அங்கு சந்திக்க வைத்ததும் அவர்களுக்கு இருந்த போதைப்பழக்கம் தான். ஒருகட்டத்தில் போதைப்பழக்கத்தில் இருந்து வெளியே வந்தனர். அதற்கும் ஒருவருக்கு ஒருவர் அனுசரனையாக இருந்து வாழ்வில் போதையைத் தாண்டிய வாழ்க்கை இருக்கிறது என புரிந்து கொண்டதால் தான் நடந்தது. இருவரும் போதைப்பழக்கத்தில் இருந்து வெளியே வந்துவிட்டாலும் நண்பர்களோ, உறவினர்களோ உதவ முன்வரவில்லை. இதனால் தான் இருவரும் சாக்கடைக்குள் தஞ்சம் புகுந்து வாழத் தொடங்கினர்.

ஒருகட்டத்தில் இரு உடல், ஓர் உயிர் என வாழத் தொடங்கியிருந்தார்கள். கடைசி சாக்கடைக்குள்ளேயே சாக்கடை தண்ணீர் வராத ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து நிரந்தரமாக வசிக்கத் துவங்கினர். இந்தவீட்டில் பேன், சமையல் அறை, எலக்ரிக்கல் விளக்கு ஆகியவையும் உள்ளது. பிளாக்கி என்னும் பெயரில் இந்த தம்பதி ஒரு நாயும் வளர்த்து வருகின்றனர். அந்த நாய் இவர்கள்மீது மிகுந்த சினேகத்தில் இருக்கிறது. இதுதொடர்பான இவர்களின் வாழ்க்கைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :