பிக் பாஸ் வீட்டினுள் சென்ற அர்ச்சனா வாழ்வில் இவ்வளவு சோகமா? நெஞ்சை உருகவைக்கும் சிரிப்பு தேவதையின் மறுபக்கம்..! Description: பிக் பாஸ் வீட்டினுள் சென்ற அர்ச்சனா வாழ்வில் இவ்வளவு சோகமா? நெஞ்சை உருகவைக்கும் சிரிப்பு தேவதையின் மறுபக்கம்..!

பிக் பாஸ் வீட்டினுள் சென்ற அர்ச்சனா வாழ்வில் இவ்வளவு சோகமா? நெஞ்சை உருகவைக்கும் சிரிப்பு தேவதையின் மறுபக்கம்..!


பிக் பாஸ் வீட்டினுள் சென்ற அர்ச்சனா வாழ்வில் இவ்வளவு சோகமா? நெஞ்சை உருகவைக்கும் சிரிப்பு தேவதையின் மறுபக்கம்..!

சன் டிவி ரியாலிட்டி ஷோக்களின் மூலம் செம ரீச் ஆனவர் அர்ச்சனா. ஒருகாலத்தில் இளமை புதுமை அர்ச்சனா என்றால் அனைவரிடமும் பேமஸ். இப்போது ஜீ தமிழில் சரிகமப லிட்டில் சாம்பியல் நிகழ்வை தொகுத்து வழங்குகிறார்.

அண்மையில் இவர் தன் பெர்சனல் பக்கம் குறித்து மனம் திறந்துள்ளார். அதில், ‘’என்னோட வீட்டுக்காரர் வினீத் டிபென்ஸ்ல இருக்காரு. புல்வாமா தாக்குதல் நடந்தப்போ என் வீட்டுக்காரர் செத்துருக்க கூடாதுன்னு வேண்டிக்க தோணுச்சு. அது சுயநலம்னு தெரியும். ஆனா அதுதானே மனுச இயல்பு. கராட்சி பார்டர்ல இருக்கேன்னு சொல்லுவார். ஆப்பிரிக்கா போறேன் வர 35 நாளு ஆகும். அப்போ தான் கால் பண்ணுவேன்னு சொல்லுவாரு. சின்ன விபத்து பார்டரில் நடந்தாகூட அவருக்கு ஏதும் ஆகிருமோன்னு பதட்டம் வரும்.

காதலிச்சு, ஓடிப்போய் கல்யாணம் பண்ணி அவர்தான் வாழ்க்கைன்னு நின்ன என்னோட அம்மா 43 வயசுல அப்பாவை இழந்துட்டு நின்னாங்க. இரண்டு பெண் பிள்ளைங்களோட! அம்மா இல்லின்னா எனக்கு இந்த வாழ்க்கையோ, அங்கீகாரமோ இல்ல. அம்மா இல்லீன்னா எனக்கு எதுவுமே இல்ல 2000வது வருசம் செப்டம்பர் 21பேச்சுப்போட்டியில் ஜெயிச்சதுக்கு ஒரு சைனீச் ரெஸ்டாரண்ட்ல பரிசு கூப்பன் கொடுத்தாங்க. அப்பாவுக்கு ஆஸ்துமா இருந்துச்சு.

திடீர்ன்னு பைக் ஓட்டும்போதே அவருக்கு ஏதோ செய்ய, பைக்கை நிப்பாட்டிட்டு உயிரை விட்டாரு. அப்போ கூட பைக்கை ஓட்டிட்டு இருக்கும்போதே ஏதாச்சும் ஆச்சுன்னா குழந்தைக்கு அடிபடும்ன்னு யோசிச்சுருக்காரு. அப்போ எனக்கு 18 வயசு தங்கச்சிக்கு 16 வயசு. அப்பா வேலை செஞ்ச பேங்க்ல அம்மா ரிசப்சனிஸ்டா இருந்தாங்க. இரண்டுபேரும் காதலிச்சு கல்யானம் செஞ்சவங்க. அப்பா பஞ்சாபி. அம்மா தமிழ்தான்.ஆனா அப்பா இறப்புக்கு கிடைகும் ரூபாயை வைச்சு இரண்டுபேரையும் படிக்க வைக்கலாம்ன்னு அம்மா நினைச்சாங்க. ஆனா அப்பா 13 லட்சம் கடனில் இருந்ததால் வெறும் 25 ஆயிரம் தான் கைக்கு வந்துச்சு. அதுபோக கிரெடிட் கார்ட் கடன் தனி!

நான் ஜெயாடிவியில் 250 ரூபா சம்பளத்துக்கு இங்கிலீஸ் நியூஸ் ரீடரா இருந்தேன். அம்மாக்கு 6 ஆயிரம் சம்பளம். அம்மா அப்பா போனபின்னாடி எங்க இரண்டுபேருக்காகவும் லைப் அர்ப்பணிச்சாங. எனக்கு பேங்க்ல டீ, காபி ஊத்தி கொடுக்க வேலை கிடைச்சுது. ஆனா அம்மா, என்னை எம்.ஏ கம்யூனிகேசனும், தங்கச்சியை எம்.பி.ஏவும் படிக்க வைச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா அப்பா வைச்சுட்டு போன கடனை அடைச்சோம். டிரான்ஸலேசன் பண்ணா ஒரு பக்கத்து 30 ரூபாய் கொடுப்பாங்க. அம்மா அதை கூட செஞ்சாங்க. அப்போதான் எனக்கு சண்டிவியில் இளமை புதுமை சான்ஸ் வந்துச்சு.

19 வயசுலயே என்கேஜ்மெண்ட் ஆகிடுச்சு. வினித் ப்ரண்டோட அண்ணன் தான். லைப் இப்போ ஜாலியா போகுது. சென்னை ஸ்டார் ஹோட்டலில் 2017ல் அம்மாவோட 60வது பெர்த்டேயை பெருசா செலிபிரேட் செஞ்சோம்.”என நெகிழ்கிறார் அர்ச்சனா

அடடே அந்த சிரிப்பு தேவதை இத்தனை சங்கடமான பாதைகளையா கடந்து வந்தார்?


நண்பர்களுடன் பகிர :