உன் அப்பன், தாத்தா இப்படி நினைச்சுருந்தா நீ வாழ்ந்திருக்க முடியாது... ஒரு விவசாயி எழுப்பிய குரல்... பத்துலட்சம் பேர் ரசித்த காட்சி..! Description: உன் அப்பன், தாத்தா இப்படி நினைச்சுருந்தா நீ வாழ்ந்திருக்க முடியாது... ஒரு விவசாயி எழுப்பிய குரல்... பத்துலட்சம் பேர் ரசித்த காட்சி..!

உன் அப்பன், தாத்தா இப்படி நினைச்சுருந்தா நீ வாழ்ந்திருக்க முடியாது... ஒரு விவசாயி எழுப்பிய குரல்... பத்துலட்சம் பேர் ரசித்த காட்சி..!


உன் அப்பன், தாத்தா இப்படி நினைச்சுருந்தா நீ வாழ்ந்திருக்க முடியாது... ஒரு விவசாயி எழுப்பிய குரல்... பத்துலட்சம் பேர் ரசித்த காட்சி..!

கொரோனா காலம் அனைவருக்கும் தற்சார்பு வாழ்க்கைக் குறித்து உணர்த்தியிருக்கிறது. பலரும் இப்போது செடி, கொடி, மரம் என வளர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். அதேநேரத்தில் இன்னும் கூட விவசாயிகளுக்கு உரிய மரியாதையை நாம் செய்துவிடவில்லை.

விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும் என்னும் வாசகம் ரொம்பப் பிரபலம். ஆனால் அந்த நன்றி விஸ்வாசம் என்றுமே சராசரி மனிதர்களாகிய நம்மிடம் இருந்தது இல்லை. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது மட்டும் நாம் விவசாயிகளுக்கும், விவசாய உற்பத்திக்கும் நன்றி சொல்கிறோம். ஆனால் இந்தியாவின் முதுகெழும்பே விவசாயம் தான். ஆனால் இங்கு இன்னும் பொருளாதார ரீதியில் விவசாயிகள் கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

இதோ இப்போது வயலில் நாற்றங்கால் தயாரிப்பில் இருக்கும் விவசாயி ஒருவர், இன்றைய தலைமுறைக்கு விவசாயம் பற்றியே தெரியவில்லை என மிகுந்த ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார். அதில் அவர், ‘விவசாயத்தை பாருடா...அப்போ தான் சோறு போடும். நாத்தப்பாருடா...நாத்தப் பயலே...மண்ணையும் சேர்த்து மதிங்க. நெஞ்சுல அள்ளி பூசிக்கிட்டோம். ஒருகாலத்துல! நீ வெள்ளை வேட்டி, பனியன்லாம் போட்டுட்டு வந்து வயலுல நிக்குற. இப்படியெல்லாம் உன் அப்பன், தாத்தாவெல்லாம் இருந்துருந்தா நீ வாழ்ந்து இருக்க முடியாது.’’என ஆவேசமாகப் பேசுகிறார். குறித்த அந்த வீடியோவை பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :