காஜல் அகர்வாலுக்கு கல்யாணம்... மாப்பிள்ளை இவர் தான்... எப்படி இருக்காருன்னு பாருங்க..! Description: காஜல் அகர்வாலுக்கு கல்யாணம்... மாப்பிள்ளை இவர் தான்... எப்படி இருக்காருன்னு பாருங்க..!

காஜல் அகர்வாலுக்கு கல்யாணம்... மாப்பிள்ளை இவர் தான்... எப்படி இருக்காருன்னு பாருங்க..!


 காஜல் அகர்வாலுக்கு கல்யாணம்... மாப்பிள்ளை இவர் தான்...  எப்படி இருக்காருன்னு பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் விஜய், கார்த்தி உள்ளிட்ட முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். துரு, துரு நடிப்பும், அழகான வசீகரிக்கும் முகமும் காஜல் அகர்வாலுக்கு தமிழர்கள் மத்தியில் அதிக ரசிகர்களை ஏற்படுத்தித் தந்தது. அந்த காஜல் அகர்வாலுக்கு வரும் 30 ஆம் தேதி திருமணம் நடக்கிறது.

காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த உள்வடிவமைப்புத் தொழில்நுட்ப வல்லுனரும், தொழில் அதிபருமான கெளதம் கிட்சுலுவை காதலிப்பதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளியாகிவந்தது. இது இப்போது உறுதியாகி உள்ளது. இவர்களுக்கான திருமணம் வரும் 30ம் தேதி நடக்கிறது. இதை நடிகை காஜல் அகர்வாலே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த திருமணம் மும்பையில் நடக்கிறது.

இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள காஜல் அகர்வால், ‘’இந்த லாக் டவுண் எங்கள் லைபில் ஒரு வெளிச்சத்தை கொண்டுவந்துள்ளது. ஆனால் சேர்ந்து வாழ்வைத் தொடங்குவதற்கு பதட்டமாக இருக்கிறது. உங்களது அன்புக்கு நன்றி. புதிய லைபில் செல்லவிருக்கும் எங்களுக்கு உங்களின் ஆசிதேவை.’ என சொல்லியிருக்கிறார்.

அதேநேரம் திருமணத்துக்குப் பின்பும் தொடர்ந்து நடிப்பேன் எனவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வாலை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :