தான் பிறந்து, வளர்ந்த வீட்டை தானமாகக் கொடுத்த எஸ்.பி.பி... எத்தனை கோடி மதிப்பு... யாருக்குக் கொடுத்தார் தெரியுமா? Description: தான் பிறந்து, வளர்ந்த வீட்டை தானமாகக் கொடுத்த எஸ்.பி.பி... எத்தனை கோடி மதிப்பு... யாருக்குக் கொடுத்தார் தெரியுமா?

தான் பிறந்து, வளர்ந்த வீட்டை தானமாகக் கொடுத்த எஸ்.பி.பி... எத்தனை கோடி மதிப்பு... யாருக்குக் கொடுத்தார் தெரியுமா?


தான் பிறந்து, வளர்ந்த வீட்டை தானமாகக் கொடுத்த எஸ்.பி.பி... எத்தனை கோடி மதிப்பு... யாருக்குக் கொடுத்தார் தெரியுமா?

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்பட ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கும் எஸ்.பி.பியின் குரலுக்கு தென்னிந்திய திரையுலகில் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உண்டு.

அதுமட்டும் இல்லாமல் ரஜினி, கமல், விஜய், அஜித் என முண்ணனி நடிகர்களுக்கும் ஓப்பனிங் ஷாங் எஸ்.பி.பிதான் பாடுவார். எஸ்.பி.பி ஓப்பனிங் சாங் பாடினால் அந்தப்படம் மெகா ஹிட் என்பதும் தமிழ் திரையுலக செண்டிமெண்ட். அவரது இழப்பு அனைத்துத் தரப்பினரையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எஸ்.பி.பி தான் பிறந்து, வளர்ந்த பூர்வீக வீட்டை கடந்த பிப்ரவரி மாதமே காஞ்சி சங்கரமடத்துக்கு தானமாக வழங்கியிருக்கிறார்.

எஸ்.பி.பியின் பூர்வீக வீடு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருக்கிறது. சென்னையில் பாடும் நிலா பாலு ஷெட்டில் ஆகிவிட்டாலும் அவரது பூர்வீக வீடு அங்கு அப்படியே இருந்தது. அதன் இன்றைய மதிப்பு கோடிக்கும் அதிகம். இந்த வீட்டில் வேத பாடசாலை அமைக்க காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை நேரில் சந்தித்து தானமாக வழங்கியிருந்தார் எஸ்.பி.பி.

எஸ்.பி.பியின் அப்பா சம்பமூர்த்தி ஹரிஹதா வித்வான். இவர் தியாகாரஜ சுவாமிகளின் தீவிர பக்தர். திரை இசை மட்டும் அல்லாது ஆன்மீகத்திலும் பற்று கொண்ட எஸ்.பி.பி தன் வீட்டை அதனாலேயே தானமாகக் கொடுத்துள்ளார். எஸ்.பி.பியின் மறைவுக்கு காஞ்சி மடம் சார்பில் இரங்கல் குறிப்பும் வந்தது குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுடன் பகிர :