கனவு கண்ட மனைவி...கணவர் செய்த தரமான சம்பவம்... இந்த காலத்தில் இப்படியும் ஒரு கணவரா? Description: கனவு கண்ட மனைவி...கணவர் செய்த தரமான சம்பவம்... இந்த காலத்தில் இப்படியும் ஒரு கணவரா?

கனவு கண்ட மனைவி...கணவர் செய்த தரமான சம்பவம்... இந்த காலத்தில் இப்படியும் ஒரு கணவரா?


கனவு கண்ட மனைவி...கணவர் செய்த தரமான சம்பவம்... இந்த காலத்தில் இப்படியும் ஒரு கணவரா?

ஏங்க, வரும்போது உப்பும், மிளகும் வாங்கிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பும் விசயங்களையே கணவர்கள் மறந்துவிடும் காலம் இது. ஆனால் இங்கே ஒரு கணவர், தன் மனைவிக்காக செய்யும் செயல் பலரையும் அவரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் பூனியனில் லால்மொநிர்ஹத் பகுதியைச் சேர்ந்தவர் சந்திராயின். முழுநேர விவசாயியான இவரது மனைவியின் பெயர் துளசிராணி தசி. இந்தம்மாவின் கனவில் அடிக்கடி ஏதாவது மிருகங்கள் வரும். அப்படி கனவில் வரும் மிருகங்களை நிஜமாகவே மனைவிக்கு வாங்கிக்கொடுத்து சந்தோசப்படுவார் சந்திராயி. அந்த வகையில் ஏற்கனவே தனது மனைவியின் கனவில் வந்த அன்னப்பறவை ஆடு, குதிரை ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து இருந்தார்.

சில தினங்களுக்கு மனைவியின் கனவில் யானை வர, அதையும் பெரும் செலவு செய்து வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதற்காக தனது விவசாய நிலத்தின் ஒர் பகுதியை விற்று, மிருகங்கள் விற்கும் மவுல்வி பசார் போய் யானை ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். கூடவே யானையை பராமரிக்க ஒரு பாகனையும் சம்பளத்துக்கு வைத்துள்ளார்.

மனைவி மீது இம்புட்டு பாசம் உள்ள மனிதரா? என அந்தப் பகுதிவாசிகள் இந்த ஜோடியை ஆச்சர்யத்துடன் பேசிக் கொள்கின்றனர்.

நண்பர்களுடன் பகிர :