நெஞ்சை உருகவைக்கும் எஸ்.பி.பியின் கடைசி தருணங்கள்.. கடைசி வரை போராடி தோற்ற மருத்துவர்கள்.. வீடியோ இதோ Description: நெஞ்சை உருகவைக்கும் எஸ்.பி.பியின் கடைசி தருணங்கள்.. கடைசி வரை போராடி தோற்ற மருத்துவர்கள்.. வீடியோ இதோ

நெஞ்சை உருகவைக்கும் எஸ்.பி.பியின் கடைசி தருணங்கள்.. கடைசி வரை போராடி தோற்ற மருத்துவர்கள்.. வீடியோ இதோ


நெஞ்சை உருகவைக்கும் எஸ்.பி.பியின் கடைசி தருணங்கள்.. கடைசி வரை போராடி தோற்ற மருத்துவர்கள்.. வீடியோ இதோ

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்பட ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கும் எஸ்.பி.பியின் குரலுக்கு தென்னிந்திய திரையுலகில் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உண்டு.

அதுமட்டும் இல்லாமல் ரஜினி, கமல், விஜய், அஜித் என முண்ணனி நடிகர்களுக்கும் ஓப்பனிங் ஷாங் எஸ்.பி.பிதான் பாடுவார். எஸ்.பி.பி ஓப்பனிங் சாங் பாடினால் அந்தப்படம் மெகா ஹிட் என்பதும் தமிழ் திரையுலக செண்டிமெண்ட். எஸ்.பி.பி பாட வந்து இதுவரை 50 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்கு சேர்க்கப்பட்டு இருந்தார் எஸ்.பி.பி. கரோனாவில் இருந்து மீண்ட அவருக்கு தொடர்ந்து நுரையீரல் தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர் சிகிட்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார். திரைக்கலைஞர்கள் மட்டுமன்றி, அனைத்துத் தரப்பு மக்களும் எஸ்.பி.பியின் மரணத்தால் சோகத்தின் விளிம்பில் உள்ளனர்.

மருத்துவமனையில் சிகிட்சையில் இருந்த எஸ்.பி.பி இடையில் கொஞ்சம் மீண்டு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உடல் மீண்டும் நலிவடைந்தது. எஸ்.பி.பியைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாகப் போராடினார்கள். அதில் மருத்துவமனையில் இருக்கும் எஸ்.பி.பிக்கு மருத்துவர்கள் பிசியோதெரபி சிகிட்சை கொடுக்கின்றனர். அதை தொடர்ந்து செய்ய முடியாமல் எஸ்.பி.பி கையை எடுக்கிறார். குறித்த அந்த காணொலி இப்போது பார்த்தால் நம் நெஞ்சையும் பிசைகிறது. சோகம் ததும்ப அதை பார்த்து வேதனைப்படுகின்றனர் எஸ்.பி.பி ரசிகர்கள்.


நண்பர்களுடன் பகிர :