உங்களின் முக அமைப்பை வைத்தே குணத்தை சொல்லிவிடலாம்... ஈஸியாக தெரிஞ்சுக்க சூப்பர் டிப்ஸ் இதோ..! Description: உங்களின் முக அமைப்பை வைத்தே குணத்தை சொல்லிவிடலாம்... ஈஸியாக தெரிஞ்சுக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!

உங்களின் முக அமைப்பை வைத்தே குணத்தை சொல்லிவிடலாம்... ஈஸியாக தெரிஞ்சுக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!


உங்களின் முக அமைப்பை வைத்தே குணத்தை சொல்லிவிடலாம்... ஈஸியாக தெரிஞ்சுக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. அது வெறுமனே வாய் வார்த்தைக்காக சொல்லப்பட்டது இல்லை. சாமுத்ரிகா லட்சண சாச்திரத்தின் படி ஒவ்வொரு முகத் தோற்றத்துக்கும், ஒவ்வொரு வகையான குணாதிசயம் உண்டு. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

முட்டை வடிவில் முக அமைப்பு கொண்டவர்கள் நடுநிலைத் தன்மையோடு இருப்பார்கள். இவர்களுக்கு ஆயுசு கெட்டி. கூடவே எதிலும் தன்னைப் பற்றியே யோசிப்பார்கள்.

சிலருக்கு முகம் முக்கோண வடிவில் இருக்கும். இவர்கள் அதீத சாமர்த்தியசாலி. அனுபவ அறிவு அதிகம் கொண்ட இவர்கள் அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்பமாட்டார்கள். இவர்களுக்கு வாழ்வு ஏற்றம், இறக்கத்தோடு சமநிலையில் போகும்.

நீள் சதுரவடிவில்முக அமைப்பைக் கொண்டவர்களுக்கு இயல்பாகவே அடக்கமும், அமைதியும் அதிகம். எதையும் ஆழ்ந்து யோசித்து செய்வார்கள். நிதான யோசனைக்குப் பின்பே எதிலும் முடிவெடுப்பது இவர்களின் பலம்.

உருண்டை வடிவில் முக அமைப்புக் கொண்டவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். பூஜை, புனஸ்காரங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதே பெண்ணுக்கு உருண்டை வடிவ முக அமைப்பு இருந்தால் கோடீஸ்வரியாக இருப்பார்கள்.

சதுரவடிவ முகம் உடையவர்கள் வீரம் அதிகம் உடையவர்கள். எளிதில் கோபம் வருவது மட்டுமே இவர்களின் பலவீனம். உடல் வலிமையால் தன் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிப்பார்கள். இவர்களுக்கு இசையில் கொள்ளைப் பிரியம்.

என்ன நண்பர்களே...இதில் உங்கள் முகம் என்ன தோற்றத்தில் இருக்கிறது என கண்டுபிடித்தீர்களா?


நண்பர்களுடன் பகிர :