விக்னேஷ் சிவனின் கைகளை இறுகப்பிடித்து... செம ஸ்டைலாக நடந்துவரும் நயன்தாரா... தீயாய் பரவும் புகைப்படம்...! Description: விக்னேஷ் சிவனின் கைகளை இறுகப்பிடித்து... செம ஸ்டைலாக நடந்துவரும் நயன்தாரா... தீயாய் பரவும் புகைப்படம்...!

விக்னேஷ் சிவனின் கைகளை இறுகப்பிடித்து... செம ஸ்டைலாக நடந்துவரும் நயன்தாரா... தீயாய் பரவும் புகைப்படம்...!


விக்னேஷ் சிவனின் கைகளை இறுகப்பிடித்து... செம ஸ்டைலாக நடந்துவரும் நயன்தாரா... தீயாய் பரவும் புகைப்படம்...!

மலையாளத் திரையுலகின் மூலம் திரைத்துறைக்கு வந்த நயன்தாராவுக்கு தமிழில் ஹரி இயக்கி சரத்குமார் நடித்த ஐயா திரைப்படம் நல்ல ஒப்பனிங் தந்தது. ஆரம்பத்தில் சீனியர் நடிகர்களோடு நடித்த நயன் இப்போது இளம் நடிகர்களுக்கு ஜோடியாக கலக்கி வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் நயன் தாரா.

நடிகை நயன் தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே...இவர்கள் இருவரும் சேர்ந்தே இப்போது அடிக்கடி ஊர்சுற்றியும் வருகின்றனர். அண்மையில் கூட மூக்குத்தி அம்மன் சூட்டிங்கிற்கு விக்னேஷ் சிவனோடே வந்திருந்த நயன் தாரா, குமரிமாவட்டம் முழுவதும் கோயில், கோயிலாக அவரோடு போய் தரிசனம் செய்தார். இப்போது லாக்டவுணில் இருக்கும் நயனும், விக்னேஷ் சிவனும் அவ்வப்போது சுவாரஸ்யமாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

நானும் ரவுடிதான் திரைப்பட சூட்டிங்கில் தான் அந்தப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் அண்மையில் இந்த ஜோடி கும்பத்துடன் கோவா சென்றது. அங்கு நயன் தாராவின் அம்மாவின் பிறந்தநாளையும் கோலாகலமாகக் கொண்டாடினார்கள். தொடர்ந்து அண்மையில் விக்னேஷ் சிவன் பெர்த்டே வந்தது. அதற்கும் நயன் செமையான கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பின் விக்னேஷ் சிவனும், நயனும் தனி விமானம் மூலம் சென்னை வந்து இறங்கினர். அப்போது நயன்தாரா, விக்னேஷ் கைகளைப் பிடித்தவாறு செம ஸ்டைலாக நடந்து வருகிறார். இதை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நயன் ஹோம் ஸ்வீட் ஹோம் என பதிவிட்டுள்ளார்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :